Connect with us
sivaji

Cinema History

சிவாஜியை பார்க்கும் ஆர்வத்தில் விழுந்தடிச்சு ஓடிய வடிவேலு! நடந்த சம்பவமே வேற – நடிகர் திலகம்னா சும்மாவா?

Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் சிவாஜி கணேசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரஙகளே இல்லை. வாழ்நாளில் இவரை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்று நடிக்க வரும் கலைஞர்கள் ஏங்கிய காலமெல்லாம் உண்டு.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அவர்கள் பட்டறையில் போய் படிக்க வேண்டாம். சிவாஜி நடித்த எல்லா படங்களையும் பார்த்தாலே போதும். நடிப்பு என்றால் என்ன என அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் வைகைப்புயல் வடிவேலு எத்தனையோ படங்களில் சிவாஜியுடன் நடித்திருந்தாலும் முதன் முதலில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த படம் தேவர் மகன்.

இதையும் படிங்க: தவறான நண்பனால் உயிரிழந்த சுருளிராஜன்!.. எம்.ஜி.ஆரால் கூட காப்பாற்ற முடியாமல் போன சோகம்..

கமல், சிவாஜி, நாசர் , கௌதமி, ரேவதி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியை தந்த படம்தான் தேவர்மகன். இந்தப் படத்தின் மூலம் தான் வடிவேலு சிவாஜியை முதன் முதலாக பார்க்கிறார். வடிவேலுவிடம் போனில் தொடர்பு கொண்டு நாளை சிவாஜியுடன் சூட்டிங் இருக்கிறது. அதனால் காலையில் வந்து விடுங்கள் என்ற தகவலை கூறியிருக்கின்றனர்.

பொள்ளாச்சியில் சூட்டிங். நாளை காலை சிவாஜியை பார்க்க முதல் ஆளாக சென்று விட வேண்டும் என்று காலை 6.30 மணியளவில் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார் வடிவேலு. ஆனால் அங்கு சிவாஜி 6.15 மணிக்கெல்லாம் மேக்கப் எல்லாம் போட்டு தயாராக இருந்தாராம்.

இதையும் படிங்க: இந்த டிரெஸ்ல பட்டன்லாம் இல்லையாம்!.. பூஜா ஹெக்டேவை பார்த்து ஏங்கும் புள்ளிங்கோ!…

இருந்தாலும் முதன் முதலாக பார்க்க போகிறோம் என்ற பதற்றம் இல்லாமல் நேராக அவரை பார்க்கும் ஆர்வத்தில் சிவாஜியை தொட்டு பார்த்திருக்கிறார். உடனே திரும்பிய சிவாஜி யாரு நீ என்று கேட்க, எனக்கு ஊர் மதுரை. நடிப்பதற்காக வந்திருக்கிறேன். இந்தப் படத்திலும் நடிக்க இருக்கிறேன்,

உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொட்டு பார்த்தேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே சிவாஜி ஓ நடிக்க வந்திருக்கிறீயா? நல்ல நடிகனா வரனும் என்று சொல்லி வாழ்த்தினாராம் சிவாஜி.

இதையும் படிங்க: எல்லாம் நடிப்புத்தான்! உண்மையிலேயே அவங்க எப்படி தெரியுமா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பற்றி பிரபலம் கூறிய தகவல்

google news
Continue Reading

More in Cinema History

To Top