வடிவேல் எவ்ளோ கேவமலமானவர் தெரியுமா?!.. புட்டு புட்டு வைக்கும் காமெடி நடிகர்..

Published on: December 10, 2023
vadi
---Advertisement---

Actor Vadivelu:தமிழ் சினிமாவில் தனது உடல் மொழியால் நகைச்சுவைகளை வாரி வழங்கிய நடிகர் வடிவேலு. ராஜ்கிரணால் இந்த சினிமாவிற்குள் அறிமுகம் செய்யப்பட்ட வடிவேலு கவுண்டமணி – செந்தில் நடித்த படங்களில் ஒரு துணை காமெடி நடிகராக நடித்து வந்தார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்தாலும் கிழக்கு சீமையிலே திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து காமெடியில் லீடு கதாபாத்திரத்தில் நடித்து இன்று நகைச்சுவைக்கு என்று ஒரு தனி பாணியை வரையறைத்து வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜிக்காக இயக்குனரும் எடிட்டரும் மோதல்… காரியம் சாதிக்க இப்படி எல்லாமா செய்வாரு?

நடிப்பில் மன்னன், பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்துவார், நடிப்பில் குறையே சொல்ல முடியாது என பலர் சொல்லி கேட்டிருப்போம். அதே நேரம் அவருடைய குணாதிசயங்களை அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் விமர்சித்திருந்தனர்.

அவர் கையில் இருந்து ஒரு பைசா கூட வராது. கொரானா காலத்தில் நாங்கள் எப்படி  இருக்கிறோம் என்று கூட விசாரிக்கவில்லை. யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார். அவரை விட காமெடியில் கைத்தட்டல்களை வாங்கி விட்டால் அடுத்த படத்தில் இருக்க மாட்டோம் என வடிவேலுவை பற்றி பலவாறு விமர்சித்து பேட்டி கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: ரஜினி படத்தில் நடிக்க தயாரான கேப்டன்! கொஞ்சம் மிஸ் – இல்லைனா என்ன பேர் கிடைச்சிருக்கும் தெரியுமா?

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பும் வடிவேலுவை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை கூறினார். அதாவது வடிவேலு ஒரு உதவியும் செய்ய மாட்டார். யார் வீட்டுக்கு போனாலும் வீட்டு வாசலில் நின்று பெட்ரோலுக்கு 1500 கொடு என கேட்டு வாங்குவார்.

அதனால்தான் அவர் நன்றாக இருக்கிறார். நான் பல உதவிகளை செய்யப் போய்தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். அவர் நல்லா இருக்கிறதுக்கு  காரணமே யாருக்கும் ஒரு பைசா கூட தரமாட்டார் என்பதுதான்.

இதையும் படிங்க: கண்களால் பேசி கதிகலங்க வைக்கும் நடிகை… இந்தப் பாஷைல பேசுறதுன்னா இவருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி…!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.