மாலைய போட்டு மஞ்சத்தண்ணி ஊத்தி வெட்டுறதுக்கு தேடுறாங்க சிக்கிராதீங்க வடிவேலு.!

by Manikandan |
மாலைய போட்டு மஞ்சத்தண்ணி ஊத்தி வெட்டுறதுக்கு தேடுறாங்க சிக்கிராதீங்க வடிவேலு.!
X

இந்த நடிகர் எப்போது ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நடிகர் என்றால் அது வடிவேலு தான். தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். அதுவும் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் அவர் ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அதற்கான அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நேற்று அந்த படத்தின் சூட்டிங்கில் வடிவேலு கலந்து கொண்டார். அந்த கிராமத்து நபர் போல ஒரு சட்டை கைலி உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார். அவருக்கு மாலை அணிவித்து படக்குழு மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்களேன் - ஏன் ஷங்கர் படத்தில் இளையராஜா எட்டிக்கூட பார்த்தது இல்லை தெரியுமா.?! பின்னணி பகீர் சம்பவங்கள்.!

வடிவேலு தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாரி செல்வராஜ் திரைப்படம். அவர் இதற்கு முன்னர் கர்ணன் படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோவுடன் தொடர்ந்து பயணிப்பார் லால். இறுதி காட்சியில் அவர் இறக்கவும் செய்துவிடுவார்.

அதேபோல வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில், மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி உடன் வரும் கதாபாத்திரமாக வடிவேலு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதால், ஒருவேளை கர்ணன் படத்தில் வருவது போல இந்த படத்திலும் இறுதிக்காட்சியில் வடிவேலுவின் கதாபாத்திரத்தை கொலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், அப்படி செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எல்லாம் படம் வெளியான பின்னர்தான் தெரியும்.

Next Story