சக காமெடி நடிகரை எத்தி உதைத்த வடிவேலு… என்ன இருந்தாலும் இப்படியாக பண்றது?

Published on: April 10, 2023
Vadivelu
---Advertisement---

வடிவேலு மிகச் சிறந்த நகைச்சுவை கலைஞன் என்பதை நாம் தனியாக கூறத்தேவையில்லை. அவரது உடல் மொழியை குறித்து ஒரு தனி புத்தகமே எழுதலாம். அந்த அளவுக்கு தமிழ் சமூகத்தையே தனது கட்டுக்குள் வைத்திருந்தவர் வடிவேலு. எனினும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு வடிவேலு மீது பல புகார்கள் எழுந்தன.

வடிவேலு கம்பேக்

படப்பிடிப்பிற்கு ஒத்துழையாமல் இருப்பது, சக காமெடி நடிகர்களின் வளர்ச்சியை தடுப்பது போன்ற பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. மேலும் “24 ஆம் புலிகேசி” விவகாரத்தை தொடர்ந்து அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் மீதான தடை நீக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வடிவேலு கதாநாயகனாக நடித்த “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. இத்திரைப்படம் வடிவேலுவுக்கு கம்பேக் என கூறப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் வடிவேலு ரசிகர்களை ஈர்க்கவில்லை. தற்போது “சந்திரமுகி 2”, “மாமன்னன்” ஆகிய திரைப்படங்களில் வடிவேலு நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் இந்த வருடத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக நடிகரை எத்தி உதைத்த வடிவேலு

வடிவேலுவிற்கும் சிங்கமுத்துவிற்கும் இடையே பல வருடங்களுக்கு முன்பு நிலம் தொடர்பாக ஒரு பிரச்சனை எழுந்தது. அதனை தொடர்ந்து இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட போண்டா மணி, வடிவேலு தன்னை எத்தி உதைத்ததாக ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.

அதாவது ஒரு முறை ஒரு பேட்டியில் வடிவேலுவும் சிங்கமுத்துவும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கருத்தை கூறினாராம் போண்டா மணி. அந்த பேட்டியை பார்த்துவிட்டு நடு இரவு இரண்டு மணிக்கு போண்டா மணிக்கு தொடர்புகொண்டு அசிங்கமாக திட்டினாராம் வடிவேலு. இதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் வடிவேலுவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் வடிவேலுவோ அவரை எத்தி உதைத்து வெளியே தள்ளிவிட்டாராம். இவ்வாறு அந்த பேட்டியில் போண்டா மணி பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெய்சங்கருக்கு மக்கள் வைத்த இன்னொரு பெயர்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.