அண்ணன் சொந்தத் திறமைல அவராகவே முன்னேறி சினிமாவுல வந்தாரு...வாயார வாழ்த்தும் வடிவேலு தம்பி
வைகைப்புயல் வடிவேலுன்னு பேரை சொன்னாலே நமக்குள் ஒரு ஆனந்தக்களிப்பு வந்துவிடும். எத்தனை சோகங்கள் உள்ளுக்குள் இருந்தாலும் இவரது காமெடி காட்சியைப் பார்த்தால் நமக்குள் ஒரு இனம்புரியாத சிரிப்பு வந்துவிடும்.
அப்படிப்பட்ட நடிகருக்கு இப்படி ஒரு பாசமான தம்பியா என ஆச்சரியப்பட வைக்கிறது அவரது யதார்த்தமான பேச்சு. அவர் யார்...?
பொதுவாக அண்ணன் தம்பி எல்லாம் சின்ன வயது வரை தான் அப்படி ஒரு நெருக்கம்...ஒற்றுமை என எல்லாம் இருக்கும். கல்யாணம் ஆயிட்டுன்னா எல்லாம் தவிடுபொடியாயிடும்.
ஆனால் ஒரு சிலர் அதற்கு விதிவிலக்கு. அப்படிப்பட்ட ஒரு தம்பி தான் வைகைப்புயல் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன். இவர் அண்ணனைப் பற்றி என்ன சொல்கிறார்? என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா...!
காமெடியில் கொடி கட்டிப் பறந்தவர் வடிவேலு. காதல் அழிவதில்லை படத்தில் நடித்துள்ளார். இவர் பெயர் ஜெகதீஸ்வரன். மலைக்கோயில் தீபம், காதல் அழிவதில்லைன்னு 2 படங்கள் பண்ணிருக்கேன்.
சொத்து தகராறுல ஒரு சின்ன பிரச்சனை. அதுக்கு அப்புறம் படம் நடிக்க முடியாம போச்சு. நிறைய வாய்ப்பு வந்தது. படம் நடிக்கல. இப்போ ரெடிமேட்ஸ் துணி வியாபாரம் பண்றேன்.
பிசினஸ்...வாங்கி கொடுத்துடுவேன். 2 பசங்க. வளர்ந்தது எல்லாம் மதுரை முனிச்சாலை. பூர்வீகம் சிவகங்கை. படிச்சது எல்லாம் சிவகங்கை. 16....17 வயசுல மதுரை வந்துட்டேன். அண்ணன் சொந்தத் திறமைல அவராகவே முன்னேறி சினிமாவுல வந்தாரு.
நானும் காமெடி பண்ணி நடிச்சு பார்த்தேன். எனக்கு அந்தத் திறமை வரல. நானும் காமெடி ஆக்ட் பண்ணுவேன். சந்தர்ப்ப சூழ்நிலை ஒத்து வரல. எலி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்கள் பிடிக்கும். வீட்லயே சிரிக்க வைப்பாரு.
மத்த ஆள்களை சிரிக்க வைக்கிறது சாதாரணம்..! அவர் பாடி ஒரு இயற்கையா அமைஞ்சது. குடும்பப் பொறுப்பு ஜாஸ்தியா இருக்கும். இப்ப தான் அவரு பெரிய ஆளா ஆகி இருக்காரு. எப்படியும் அவரு நல்லா இருக்கணும்.
எங்களை எல்லாம் நல்லா பார்த்துக்குவாரு. 6 பேரு இருக்கோம். அவரு தான் பெரியவரு. 2 தங்கச்சி. அவரு தான் கல்யாணம் பண்ணி வச்சாரு. எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சதும் அவரு தான். அப்பா கண்ணாடி கடை வச்சிருந்தாரு.
9 வரை படிச்சாரு வடிவேலு. கண்ணாடி கடைல வேலை செய்தாரு வடிவேலு. அப்புறம் நாடகம் நடிச்சாரு. சினிமாவுக்குப் போயிட்டாரு.
எங்க வீட்ல எல்லாருமே கண்ணாடி கடை தான். நான் நடிக்கப் போகாட்டாலும் அவரு நல்லா இருக்கணும். அவரு நடிக்கிறாருல்ல. அதுக்கு மேல என்ன வேணும்?! நாலு வருஷத்துக்கு அப்புறம் இப்போ படம் நடிக்காருன்னு கேள்விப்பட்டேன்.
தற்போது வைகைப்புயல் வடிவேலு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.