More
Categories: Cinema News latest news

வடிவேலு சொன்ன ஒரு வார்த்தை!.. குடிப்பழக்கத்தை விட்ட முத்துக்காளை!.. இவ்வளவு நடந்திருக்கா!…

வடிவேலுவின் காமெடி டீமில் இருந்தவர் ஒருவர்தான் முத்துக்காளை. பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். தலையில் மண்டை ஓட்டை வரைந்து கொண்டு ‘வா செத்து செத்து விளையாடுவோம்’ என வடிவேலுவை இவர் அழைக்கும் காமெடி காட்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

வடிவேல் டீமில் அல்வா வாசு, தம்பி ராமையா, சிசர் மனோகர், போண்டா மணி, பாவா லட்சுமணன், பெஞ்சமின், சாரப்பாம்பு, சிங்க முத்து என பலரும் இருந்தனர். அதில், வடிவேலு யாரை அழைக்கிறாரோ அவர்கள் மட்டும் வடிவேலுடன் நடிப்பார்கள். வடிவேலு காமெடியில் பீக்கில் இருந்த போது இவர்கள் எல்லோரும் அவருடன் இணைந்து நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: மாமன்னன் மேடையிலேயே வடிவேலு சொன்ன அட்வைஸ்!. கடுப்பாகி முகம் சிவந்த மாரி செல்வராஜ்!..

வடிவேலு மார்க்கெட் இழந்து சினிமாவில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த போது அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதோடு, ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் வடிவேலுவின் நிஜமான குணம் பற்றி பல விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். பெரும்பாலானோர் வடிவேலுவுக்கு எதிராகவே பேசினர்.

அதில் ஒருவர்தான் முத்துக்காளை. ‘வடிவேலு ஆடிய ஆட்டத்துக்கு கிடைத்த பதில் இது. விதி வேலை செய்யுது’ என சொன்னார். ஏனெனில், தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை வடிவேலு மிகவும் மட்டமாக நடத்துவார் என்பதுதான் எல்லோருடையை புகாருமாக இருந்தது.

இதையும் படிங்க: நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர்களிடம் சண்டை போட்ட நடிகர்கள்! வாய்க்கொழுப்பால் பல்பு வாங்கிய வடிவேலு

முத்துக்காளைக்கு குடிப்பழக்கம் உண்டு. ஒருமுறை படப்பிடிப்புக்கு தாமதமாக அவர் வந்த போது வடிவேலு ‘முதலில் அல்வா வாசு குடியால சாவான். அவனுக்கு அப்புறம் முத்துக்காளை குடியால சாவான்’ என சொன்னாராம். இதைக்கேட்டதும்தான் இனிமேல் குடிக்கவே கூடாது என முத்துக்காளை முடிவெடுத்தாராம்.

உடனே, குடியை நிறுத்தும் பயிற்சி மையத்திற்கு சென்று அவர்கள் ஆலோசனைகளை கேட்டு பயிற்சிகள் எடுத்து 2006ம் வருடம் குடியை நிறுத்திவிட்டார். கடந்த 6 வருடங்களாக முத்துக்காளை குடிப்பதில்லை. மேலும், தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில், பி.ஏ., எம்.ஏ, முடித்துவிட்டார். இப்போது பி.எட் படித்து வருகிறார். இப்போது படிப்பே எனக்கு போதையாகிவிட்டது என்கிறார் முத்துக்காளை.

இதையும் படிங்க: சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலுவின் அட்ராசிட்டி!.. ரெடியா இருங்க மக்களே!…

Published by
சிவா

Recent Posts