வடிவேலுவின் புதிய படத்துக்கு இதான் டைட்டில்... என்ன ஒரு வில்லத்தனம்!....
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்து வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்படம் பற்றி இயக்குனர் சுராஜ் கடந்த 2 வருடங்களாக பேசி வருகிறார். ஆனால், இப்படத்தின் தலைப்பை அவர் முறையாக பதிவு செய்யவில்லை.
இதில் பிரச்சனை என்னவெனில், பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷை வைத்து ‘நாய் சேகர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. மேலும், இந்த தலைப்பை முறையாக அவர்கள் பதிவும் செய்துள்ளனர். எனவே, வடிவேல் கோரிக்கை வைத்தும் அந்த தலைப்பு அவருக்கு கிடைக்கவில்லை.அதோடு, நாய் சேகர் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு விட்டது.
இந்நிலையில், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’என்கிற தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் வில்லத்தனம் என்னவெனில் இதுதான் ஒரிஜினல் என சொல்வது போல் ‘ஒரிஜினல்’ என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
எப்படி இருந்தாலும் நாய் சேகர் என்கிற தலைப்பை விட வடிவேலுவுக்கு மனசு இல்லை போலும்.