
Cinema News
வாலை சுருட்டி அடக்க ஒடுக்கமாகிய வடிவேலு.! வாங்குன அடி கொஞ்ச நஞ்சமா.?!
ஒரு காலத்தில் வடிவேலு இல்லாத தமிழ் சினிமாவே இல்லை என்கிற நிலைமை கோலோச்சி இருந்தது. அதிலும், படம் முழுக்க எடுத்து முடித்துவிட்டு, படம் வியாபாரம் ஆகவேண்டும் என வடிவேலுவிடம் சில நாட்கள் கால்ஷீட் தனி காமெடி டிராக் ரெடி செய்து சேர்த்து வியாபாரம் செய்யப்பட்ட படங்கள் எல்லாம் இங்கு உண்டு.
அப்போது வடிவேலு கால்ஷீட் வாங்குவது சூப்பர் ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட் வாங்குவதற்கு சமம் என்பார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். அப்படி இருந்த வடிவேலு தற்போது பம்பரமாய் சுற்றி படக்குழுவினர் எப்போது வர சொல்கிறார்களோ அப்போது சரியாக வந்து நடித்து கொடுத்து வருகிறாராம்.
இவர் ஹீரோவாக நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ர்ஸ் படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் மீதம் இருக்கிறதாம். அதே போல மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறாராம்.
இதையும் படியுங்களேன் – சசிகுமார் கூட சேர்ந்ததுனால படம் பிளாப் ஆயிடிச்சு… ஷாக் கொடுத்த ஜெய்.!
அது இரண்டையும் முடித்து விட்டு ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள சந்திரமுகி 2ஆம் பாகத்திலும் நடிக்க உள்ளாராம். அதற்கிடையில் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க உள்ளாராம்.
இதனை எல்லாம் பார்த்த வடிவேலு கடந்த 10 வருடமாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலுவுக்கு தற்போது தான் வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அதனை சரியாக வடிவேலு பயன்படுத்தி வருகிறார் என பாராட்டி வருகின்றனர்.