சந்தானம் செஞ்ச காரியத்தை கூட வடிவேலு செய்யலை- பிரபல காமெடி நடிகர் கண்ணீர் பேட்டி…
வடிவேலு தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் சிங்கமுத்து, போண்டா மணி, முத்துக்காளை, சிசர் மனோகர், வெங்கல் ராவ், பாவா லட்சுமணன், அல்வா வாசு போன்ற பல நடிகர்களை தன்னுடன் இணைத்து நடிக்க வைத்தார். ஆனால் சமீப காலங்களாக தன்னுடன் நடித்த பழைய நடிகர்களை எல்லாம் வடிவேலு ஓரங்கட்டிவிட்டார். கடந்த ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்து வெளிவந்த “நாய் சேகர்” திரைப்படத்தில் கூட சிவாங்கி, ரெடின் கிங்கஸ்லி போன்றோரே நடித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சமீப நாட்களாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல காமெடி நடிகர்கள் அவரை குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் “வடிவேலுவா இப்படி எல்லாம் செய்தார்” என்று அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
வடிவேலுவை நாம் ஒரு காமெடி நடிகராகவே பார்த்து வருகிறோம். ஆனால் கேமராவிற்கு பின்னால் அவர் நடந்துகொள்ளும் விதமே வேறு என்று பல சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். அதே போல் வடிவேலு தன்னுடன் நடிக்கும் சக காமெடி நடிகர்களை வளரவிடமாட்டார் எனவும் அப்படி யாராவது தன்னை மீறி தனித்துவமாக தெரிய தொடங்கினால் அவரை மட்டுப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிடுவார் என்றும் பலர் கூறுகின்றனர். இது போன்று வடிவேலுவை குறித்து அவர்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத்தான் கொடுக்கின்றன.
இந்த நிலையில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகரான பாவா லட்சுமணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “வடிவேலு தன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்வதில் எப்படிப்பட்டவர்?” என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த பாவா லட்சுமணன், “அவருடன் பல திரைப்படங்களில் நடித்த அல்வா வாசு மதுரையில்தான் இறந்துப்போனார். அப்போது வடிவேலு மதுரையில்தான் இருந்தார். அவரையே சென்று வடிவேலு பார்க்கவில்லை” என கூறிய அவர், அப்பேட்டியின் தொடக்கத்தில்,
“கொரோனாவில் எங்களுக்கு வேலை இல்லாம போனபோது நான் செத்துப்போய்விட்டதாக செய்தி பரவியது. கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் எல்லாம் ஒட்டிவிட்டார்கள். உடனே பயந்துப்போய் சந்தானம் உள்ளிட்ட பலரும் எனக்கு ஃபோன் செய்தார்கள். ஆனால் வடிவேலு எனக்கு ஃபோன் செய்யவில்லை” என்று மிகவும் கவலையோடு கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நடிக்க தயக்கம் காட்டிய லதா; எம்.ஜி.ஆர் சொன்ன ஒரு வார்த்தை: அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!..