Connect with us
vadivelu and his brother

Cinema News

சொந்த தம்பிக்கு கூட உதவாத வடிவேலு!.. இவ்வளவு சுயநலமா?.. கிழித்து தொங்கவிட்ட பயில்வான்..

வடிவேலு தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவர். இவரை வைகைப்புயல் வடிவேலு என அழைப்பர். ஆரம்ப காலத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்த இவர் பின் கடும் முயற்சியினால் சினிமா துறைக்குள் நுழைந்தார். ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதலில் அறிமுகமானார். கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமான இவரின் நடிப்பு  மிக சிறப்பானதாக இருக்கும்.

ஒல்லியான தோற்றம், கருப்பு நிறம் என இவரின் தோற்றத்தை கண்டாலே நமக்கு சிரிப்பு வரும். இவரின் நடை, இவர் நடனம் ஆடும் விதம் இவருக்கென தனி ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. ஆணழகன், வசீகரா, சந்திரமுகி போன்ற திரைப்படங்களின் மூலம் இவரின் காமெடி திறமையை உலகறிய செய்தார்.

இதையும் படிங்க: மரண அடி வாங்கியும் மாறாத மாமன்னன்!.. மீண்டும் குடைச்சல் கொடுக்கும் வடிவேலு…

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வலம் வந்தார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மாமன்னன். இப்படத்தில் இவருடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார்.

பட்டியலின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இக்கதை நகரும். இப்படம் மிக பெரிய வெற்றியையும் சம்பாதித்தது. இவர் இவர் இவ்வளவு பெரிய பெயரை சம்பாதித்தாலும் நிஜ வாழ்க்கையில் இவரின் முகம் வேறு. இவர் தன்னுடன் பணியாற்றிய சக நடிகர்களுக்கு நிஜ வாழ்வில் எந்த ஒரு உதவியையும் செய்யாதவர். இங்கிலிஷ்காரன், சுந்தரா டிராவல்ஸ் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் போண்டா மணி. இவரை நாம் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் காணலாம்.

இதையும் படிங்க: வடிவேலு சரியான ஆளுங்க… குத்தமா சொல்லல… சும்மா சொல்லணும்னு தோணிச்சு… பகீர் கிளப்பிய பயில்வான்

இவர் கடந்த ஆண்டு உடல் நல குறைவினால் அவதிப்பட்டார். மயில்சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். ஆனால் வடிவேலுவோ இவருக்கு சிறு உதவி கூட செய்யவில்லை. வடிவேலுவிடம் உதவி கேட்டு அவர் உதவாதவர்களின் பட்டியல் அதிகம். அல்வா வாசு, பாவா லட்சுமணன் போன்ற ஏராளமானவர்கள் இவரிடம் உதவி என்று வந்து ஏமாந்துள்ளனர். தன்னோடு பணியாற்றிய நடிகர்களுக்குதான் உதவ மாட்டார் என்றால் தன்னுடைய சொந்த தம்பிக்கே இவர் துரோகம் செய்துள்ளார்.

வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன். இவரை நாம் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் காணலாம். என்னதான் தான் ஒரு நடிகராக இருந்தாலும் அந்த பகட்டு இல்லாமல் மிகவும் எளிமையானவராக இருப்பார். இவருக்கு கல்லீரல் தொற்று ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். என்னதான் தான் தம்பியாக இருந்தாலும் வடிவேலு தான் நினைத்திருந்தால் அவருக்கு சிறப்பு சிகிச்சை கொடுத்து காப்பாத்தி இருக்கலாம். ஏன் இவர் நினைத்திருந்தால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்து தனது தம்பிக்கு சிறப்பாகவே சிகிச்சை அளித்து காப்பாத்தியிருக்கலாம். சொந்த தம்பிக்கே உதவாத இவர் பிற நடிகர்களுக்கு எப்படி உதவுவார் என பிரபல நடிகரும் யூடியூப்பருமான பயில்வான் ரங்கநாதன் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இனிமே என் காட்டுல மழை தான்… ஓவர் பில்டப் கொடுக்கும் வடிவேலு! இதே உருட்டதான முன்னவும் போட்டீங்க!

google news
Continue Reading

More in Cinema News

To Top