அந்த ஹீரோவ என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க! கொட்டித்தீர்த்த வடிவேலு
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என அன்பால் அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. தன்னுடைய முக பாவனைகளாலும் உடல் மொழியாலும் அனைவரையும் சிரிக்க வைப்பவர். அதையும் தாண்டி ஒரு நல்ல நடிகர் வடிவேலு. நகைச்சுவை மட்டுமில்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் மனதில் ஆணித்தரமாக பதிந்தவர்.
இந்த நிலையில் சமீபகாலமாக வடிவேலுவை பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அவர் கூட நடித்த சக நடிகர்களே வடிவேலுவை பற்றி அறியப்படாத சில விஷயங்களை முன்வைத்திருக்கின்றனர். யாரையும் முன்னேற விடமாட்டார் என்றும் அவரே ஸ்கோர் பண்ண வேண்டும் என்று நினைப்பவர் வடிவேலு என்றும் கூறியிருக்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வடிவேலு ஒரு பேட்டியில் கொட்டித் தீர்த்திருக்கிறார். அதாவது ‘ நான் யாரிடமாவது கமிஷன் கேட்டேனா? யார் குடியையாவது கெடுத்தேனா? அப்படி இருக்கும் வகையில் ஏன் இப்படி என் மீது பலியை போடுகின்றனர் என எனக்கு தெரியல’ என கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு சில பேர் என்னை கூண்டோடு காலி பண்ண வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் நிறைய பேருக்கு சுகர், அந்த நோய், இந்த வியாதி என திரையுலகில் மாத்திரையிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். சில பேர் படுத்த படுக்கையாக இருக்கின்றனர், அத்தோடு போகட்டும், சரி விடுங்க, ஆண்டவன் புண்ணியத்துல நான் நல்லா இருக்கேன், எனக்கு ஒன்றும் ஆகல என சொன்ன வடிவேலு ஒரு வேளை விஜயகாந்தை பற்றித்தான் சொல்லியிருப்பாரோ என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் நிரூபர் ஒருவர் வடிவேலுவிடம் ‘பெரிய நடிகர்களை இயல்பா கலாய்ச்சது நீங்கதான்?’ என கேட்டார்.
அதற்கு பதிலளித்த வடிவேலு கவுண்டமணி தான் அனைவரையும் மிகவும் உரிமையோடு பேசுவார், எல்லாரையும் கிண்டல் அடிப்பார். எனக்கு அந்தப் பழக்கம் இல்லை என்று சொன்ன வடிவேலு பிரண்ட்ஸ் படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களை தன் கட்டுக்குள் வைக்கிற மாதிரி கதாபாத்திரம், அப்படி ஏதாவது இருந்தால் நடிப்பேன் , அவ்ளோதான், ஆனாலும் அதுவும் சில ஹீரோக்களுக்கு பிடிக்க மாட்டீக்குது,
போடா வாடானு சொன்னாலே போயானு விரட்டி விட்டுராங்க, அப்படித்தான் சில ஹீரோக்களை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்கனு வடிவேலு புலம்பி தீர்த்திருக்கிறார். ஒரு வேளை அஜித்தை பற்றி சொல்லியிருப்பாரோனு கூட ரசிகர்கள் கூறுகின்றனர்.