வடிவேலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுண்டமணி… விஜயகாந்த் செய்த துணிகர காரியம்… என்ன நடந்தது தெரியுமா?

Published on: April 11, 2023
Chinna Gounder
---Advertisement---

வடிவேலு தமிழ் சினிமாவின் மாபெரும் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இவர் பிறந்த ஊர் மதுரை. ஒரு முறை ராஜ்கிரண், தனது ரசிகரின் திருமணத்திற்காக மதுரை சென்றிருந்தார். சென்னை திரும்புவதற்கு இரவு நேரத்தில்தான் ரயில். ஆதலால் அதுவரை என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் ராஜ்கிரண்.

ராஜ்கிரணை கவர்ந்த இளைஞர்

அப்போது மணமகன் தனது உற்ற நண்பராக இருந்த ஒரு இளைஞரை ராஜ்கிரணுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் ராஜ்கிரணிடம் மிக நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சும், உடல்மொழியும் ராஜ்கிரணுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த இளைஞர்தான் வடிவேலு.

அவ்வாறுதான் ராஜ்கிரண், வடிவேலுவை “என் ராசாவின் மனசுல” திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இதனை தொடர்ந்து விஜயகாந்த்தின் “சின்ன கவுண்டர்” திரைப்படத்தில் வடிவேலு நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அப்போது அந்த படத்தில் ஏற்கனவே கவுண்டமணியும் செந்திலும் நடித்துக்கொண்டிருந்தனர்.

வடிவேலு நடிக்க கூடாது

ஆதலால் வடிவேலு இத்திரைப்படத்தில் நடிக்க கூடாது என சொல்லிவிட்டாராம் கவுண்டமணி. வடிவேலு கவுண்டமணியிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லையாம். அப்போது வடிவேலு விஜயகாந்த்திடம் சென்று “கவுண்டமணி ஐயா என்னை சேர்த்துக்க மாட்டிக்காரு. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்கய்யா” என கேட்டிருக்கிறார்.

உடனே விஜயகாந்த், இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரிடம் “வடிவேலு எனக்கு குடை பிடிப்பவராக நடிக்கட்டும்” என்று கூறி வடிவேலுவை அந்த படத்தில் சேர்த்துக்கொண்டாராம். இவ்வாறுதான் “சின்னக் கவுண்டர்” திரைப்படத்தில் வடிவேலு நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கான தகுதி இருக்கா?- விஜய்யை கண்டபடி விமர்சித்த காமெடி நடிகர்…

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.