Connect with us

Cinema History

சம்பளத்தை ஏத்திக்கேட்ட வடிவேலு… விரட்டிவிட்ட பாரதிராஜா!… வைகை புயலுக்கு நடந்த சோகம்…

தமிழில் உள்ள டாப் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. வடிவேலு இல்லாமல் தமிழ் சினிமாவின் வரலாற்றை யாராலும் எழுத முடியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் வடிவேலு.

ஆரம்பத்தில் என் ராசாவின் மனசிலே என்கிற திரைப்படத்தில் ராஜ்கிரணனின் உதவியால் அறிமுகமானார் வடிவேலு. தனிப்பட்ட நகைச்சுவை பாணியை கொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் வடிவேலு. இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

நகைச்சுவை நடிகர் என்றாலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் வடிவேலு. ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார். அவர் வளர்ந்து வந்த காலத்தில் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார்.

வடிவேலுவிற்கு நடந்த சங்கடம்:

கிழக்கு சீமையிலே திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கினார். எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்தார். கொஞ்சம் பெரிய படம் என்பதால் இதில் சம்பளத்தை ஏத்தி கேட்கலாம் என நினைத்தார் வடிவேலு. எனவே அவர் பாரதிராஜாவிடம் சென்று இந்த படத்திற்கு 25,000 ரூபாய் சம்பளம் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த பாரதிராஜா, நீ படத்துலயே நடிக்க வேண்டாம் போ, என கூறி விரட்டிவிட்டுள்ளார். கண்ணீருடன் வந்த வடிவேலுவை பார்த்த எஸ்.தாணு என்ன விஷயம் என கேட்டுள்ளார்.

அப்போது வடிவேலு நடந்த விஷயங்களை கூறினார். பிறகு எஸ்.தாணு 25,000 ரூபாயை கொண்டு வந்து கொடுத்து சம்பளம் பத்தி என்கிட்ட கேட்க வேண்டியதுதானே என ஆறுதல் கூறி அனுப்பியுள்ளார்.இதை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: 40 லட்சம் போட்டு உருவாக்கிய வீட்டை ஒரே நொடியில் உடைத்து எறிந்த தயாரிப்பாளர்… ஏன் இப்படி!

google news
Continue Reading

More in Cinema History

To Top