More
Categories: Cinema News latest news

ஒரு சைக்கோவை ‘மாமன்னனா’ காட்டினா ஏத்துக்குவோமா? வேண்டாத வேலை பார்த்த மாரிசெல்வராஜ்

தமிழ் திரையுலகில் ஒரு மாபெரும் நடிகனாக இருப்பவர் வடிவேலு. அவரைப் பற்றி பல சர்ச்சைகள் வெளி வந்தாலும் நடிப்பின் வழியாக அவரைப் பார்க்கும் போது ஒரு பெரிய கலைஞனாகவே காணப்படுகிறார். ராஜ்கிரன் மூலமாக முதன் முதலில் அறிமுகமான வடிவேலு கவுண்டமணியாழ் விரட்டியடிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் பட்ட அவமானங்கள்

Advertising
Advertising

இருந்தாலும் தனக்கு நேர்ந்த அத்தனை அவமானங்களையும் தாங்கிக் கொண்டு படிப்படியாக முன்னேறி தன்னுடைய நடிப்பாலும் உடல் பாவனைகளாலும் ரசிகர்களை மகிழ்வித்தவர் வடிவேலு. அவரின் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அவரை சுற்றி சக நடிகர்கள் ஒரு ஐந்து பேர் எப்பொழுதுமே அவருடன் இருந்து கொண்டே தான் வந்தார்கள்.

vadi1

அவர்கள் மட்டும் இல்லை என்றால் வடிவேலு இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்றுதான் பல பேர் கூறி வருகிறார்கள். அவர்களில் சிஸ்ஸர் மனோகர், வெங்கல் ராவ், போண்டா மணி, பாவா லட்சுமணன் உட்பட இன்னும் சில நடிகர்கள் வடிவேலுவின் குரூப்பில் இருந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் இன்று வடிவேலுவுக்கு எதிராக நிற்கின்றார்கள்.

சக நடிகர்களின் சம்பளத்தில் கறார் காட்டிய வடிவேலு

ஆரம்ப காலத்தில் இருந்தே வடிவேலு ஒரு குறிப்பிட்ட தொகையை அதிக சம்பளமாக பெறும்போது அவருடன் நடிக்கும் சக நடிகர்களின் சம்பளம் மிகக் குறைவாகத்தான் இருக்குமாம். தயாரிப்பாளர்கள் அதிகம் கொடுக்க முன் வந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்லி தட்டிக் கழித்து விடுவாராம் வடிவேலு.

ஏனெனில் அவர்களை இருக்க வேண்டிய இடத்தில் வைத்தால் தான் நல்லது என்ற எண்ணத்தில் எப்பொழுதும் மட்டம் தட்டிக் கொண்டே இருப்பாராம் வடிவேலு. மேலும் அவருடன் நடித்த அல்வா வாசு என்ற நடிகர் மரணம் அடைந்த நேரத்தில் அவரைப் பார்க்க சக நடிகர்கள் முற்படும்போது பேருந்தில் போக முடியாத சூழ்நிலை ஏற்பட வடிவேலுவிடம் போய் ஒரு வேன் ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கேட்டார்களாம்.

vadi2

அதற்கும் வடிவேலு போ போ அதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாராம். அந்த நேரத்தில் கூட வடிவேலு அவருடைய இறப்பிற்கு செல்ல வில்லையாம். அதேபோல தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் தன்னைவிட ஸ்கோர் செய்யக்கூடாது என்ற எண்ணத்திலும் இருப்பாராம் வடிவேலு.

அப்படி யாராவது ஸ்கோர் செய்து விட்டால் அவருடைய வாழ்க்கையே காலி என்ற நிலைமை தான். ஆனால் விவேக் அவருடன் இருந்த சக நடிகர்களுக்கு தேவையான உதவிகளை செய்யக்கூடிய வள்ளலாக இருந்தவர். இதைப் பற்றி கூறிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு வடிவேலு முழுக்க முழுக்க ஒரு சைக்கோ. நடிப்பு மட்டும் தான் இருக்கிறதே தவிர பொது வாழ்க்கையில் அவரைப் பற்றி கேட்டால் மோசமான தகவல்கள் தான் வந்து கொண்டு இருக்கும். அந்த அளவுக்கு கேரக்டரில் மிகவும் வொர்ஸ்ட் வடிவேலு என்று கூறி இருக்கிறார்.

சைக்கோ மாமன்னன்

மேலும் கூறிய செய்யாறு பாலு குருவி தலையில் பனங்காயை வைத்த மாதிரி தான் இந்த மாமன்னன் படமும் அமையப்போகிறது என்று கூறி இருக்கிறார் ஏனெனில் வடிவேலுவை ஒரு காமெடியனாக கோமாளியாக பார்த்த வரைக்கும் திடீரென்று இவ்வளவு ஒரு பெரிய கேரக்டரை அவர் மீது திணித்திருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான வேலை தான் .ஒரு வேளை இந்தப் படம் மைனஸ் ஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் வடிவேலு தான் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

vadi3

மேலும் இந்த மாதிரி பெயர் நமக்கு வரக்கூடாது என்ற காரணத்தினால் தான் எம்ஜிஆர் ஒரு புரட்சித் தலைவராக நிஜத்திலும் சரி சினிமாவிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி அப்படியே வாழ்ந்து வந்தார். ஆனால் வடிவேலு நிஜத்தில் ஒரு மாதிரியாகவும் சினிமாவில் ஒரு மாதிரியும் காணப்படுகிறார். இப்படி ஒருவரை இந்த படத்தில் பார்க்கும் மக்கள் எப்படி மாமன்னானாக பார்ப்பார்கள்? நிஜத்தில் அவரைப் பற்றி என்ன செய்திகள் வெளிவந்ததோ அதுதான் அவர்கள் மனதிற்குள் வந்து நிற்கும் என்றும் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : ஆமா எங்கப்பா 5 பொம்பளைய வச்சிருந்தார்!.. ஆனா!. ராதாரவி பகிர்ந்த ரகசியம்…

Published by
Rohini

Recent Posts