தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ஆரம்பத்தில் இருந்தே வடிவேலுவிற்கு என்று தமிழ் சினிமாவில் சிறப்பான வரவேற்பு இருந்தது. அவர் ஒரு காட்சியில் வருகிறார் என்றால் நமது கண்கள் அவரை மட்டுமே பார்க்கும் அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும்.
சாதரண நகைச்சுவை மட்டும் செய்துக்கொண்டிருந்த வடிவேலுவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் தேவர் மகன். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருப்பார் வடிவேலு. அதனை அடுத்து வந்த கிழக்கு சீமையிலே திரைப்படத்திலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நகைச்சுவை நாயகனாக இருந்த வடிவேலு சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பிறகு மீண்டும் சினிமாவிற்கு வந்தும் ஏதும் நல்ல படங்கள் அவருக்கு அமையவில்லை. இந்த நிலையில் உதயநிதியுடன் இவர் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சையை கிளப்பிய வடிவேலு:
இதுக்குறித்து மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வடிவேலு தேவர் மகனுக்கு பிறகு இந்த படம்தான் எனக்கு முக்கியமான படம் என கூறினார். ஆனால் தேவர் மகன் வந்த பிறகு அதிக சர்ச்சைக்கு உள்ளானது. அப்படி இருக்கும்போது வடிவேலு அந்த படத்தை மாமன்னன் திரைப்படத்தோடு தொடர்புப்படுத்தி கூறுகிறாரே என பலருக்கும் அதிர்ச்சியாகினர்.
ஆனால் சுதாரித்துக்கொண்ட வடிவேலு தேவர் மகன் சமூகநீதி படம் கிடையாது. ஆனால் இது சமூகநீதி திரைப்படம் என கூறி சமாளித்தார் வடிவேலு.
இதையும் படிங்க: அடுத்த படத்துக்கு ஒரு கோடி கொடுத்தாதான் செய்வேன்!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த வேலு பிரபாகரன்..
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…