வடிவேல் ஏழரையை இழுத்த 5 பெரிய நடிகர்கள்!.. கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்..

Vadivelu: விஜயகாந்திடம் மட்டுமல்ல வடிவேலு இன்னும் சில முன்னணி நடிகர்களிடம் கூட சண்டையை வளர்த்து இருக்கிறார். அதனால் அவர்களுடன் நடிக்க முடியாத நிலை கூட உருவாகி இருக்கிறதாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அஜித்குமார்: விஜயகாந்தை மட்டுமல்ல அஜித்திடம் கூட வம்பு செய்துள்ளார். ராஜா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் வடிவேலு. அப்போது ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போது டயலாக்கிற்குள் வாடா, போடா என்பதை அவராகவே சேர்த்து கொண்டாராம். அஜித் சாதாரணமாகவே யாரையும் மரியாதையுடன் பேச வேண்டும் என நினைப்பவர். இது அவருக்கு பிடிக்கவில்லை. சரி படத்துக்கு என சும்மா விட்டு இருக்கிறார்.
ஆனால் ஷூட்டிங் இடைவேளையில் கூட அவரை அப்படியே கூப்பிட பயிற்சி செய்துக்கிறேன் என சமாளித்தாராம். அதில் கடுப்பான அஜித், அதன் பின்னர் தன்னுடைய எந்த படத்திலும் இதுவரை வடிவேலுவுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.
விஜயகாந்த்:
விஜயகாந்துடன் படப்பிடிப்பிலே தன் வேலையை காட்டி இருக்கிறார். ஒரு படப்பிடிப்பில் தனக்கு கொடுக்கப்பட்ட டயலாக்கை சொல்லாமல் அவரே சில வசனங்களை போட கடுப்பானராம் இயக்குனர். உடனே விஜயகாந்தே கூப்பிட்டு செய்யாதே எனக் கூற அந்த வசனமெல்லாம் நல்லா இல்லை என்று திமிராகவே பேசினாராம். படமாக்கப்பட்டு கொண்டு இருக்கும் போது அதையே செய்ய செல்லமாக அடித்ததாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
இதையும் படிங்க: சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!..
தனுஷ்:
முதலில் படிக்காதவன் படத்தில் வடிவேலு தான் நடித்து வந்து இருக்கிறார். 10 நாட்கள் ஷூட்டிங் என்ற ப்ளானில் படக்குழு ஹைதராபாத் சென்று இருக்கிறது. இங்கையும் தன் இஷ்டத்துக்கு நடிக்க தனுஷே டைரக்டர் சொல்படி கேளுங்களேன் என்றாராம். அதுக்கு இவர் மாமனாருக்கே நான் தான் சொல்லி தந்தேன். இவர் எனக்கு சொல்லி தரதா என சத்தமாக திட்டி பேசியதாக தகவல்.
மேலும், வில்லன் சுமனின் காலினை அமுக்குவது போல ஒரு சீன் இருக்க அதில் என்னால் நடிக்க முடியாது என அடம் பிடித்தவர். சொல்லாமல் கொள்ளாமல் இடத்தினை காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாராம். அதுக்கு அப்புறம் தனுஷும், வடிவேலுவுடன் இணைந்து நடிக்கவில்லை.
ராஜ்கிரண்:
வடிவேலுவை அறிமுகப்படுத்திய ராஜ்கிரணுக்கு திடீர் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு இவர் 5 லட்சம் கடன் கொடுத்தாராம். ஆனால் அதை தனக்கு தெரிந்து எல்லாருக்குமே சொல்லிவிட்டாராம். கடைசியில் இந்த விஷயம் ராஜ்கிரண் காதுக்கே செல்ல கூர்தீட்டிய மரத்து மேலயே பாய்றான் என வேதனையில் சொல்லினாராம்.
இதையும் படிங்க: 10 நொடி விளம்பரத்திற்கு 4.50 லட்சமா? நடிக்க மறுத்த ‘விக்ரம்’ பட புண்ணியவான்ஸ் – ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவிங்க
மாதவன், சுந்தர்.சி:
இதனை தொடர்ந்து, ரெண்டு படத்தில் மாதவனுடன் வடிவேலு இணைந்து நடித்து இருப்பார். அந்த படத்தினை சுந்தர்.சி இயக்கி இருப்பார். இதுக்கு முன்னாடி லண்டன், கிரி, வின்னர் உள்ளிட்ட ஹிட் படங்களை வடிவேலுவுக்கு கொடுத்தவர் அவர் தான். ஆனால் ரெண்டு படத்தில் மாதவன் கால்ஷூட்டை வைத்து வடிவேலு கால்ஷூட்டை படக்குழு கேட்டு இருக்கிறார்கள்.
நான் பெரிய ஆளா அவரு பெரிய ஆளா? என ஓவராக பேச கடுப்பான சுந்தர்.சி முதல் பகுதியில் மட்டுமே வடிவேலு காட்சிகளை வைத்து இருப்பார். இதே வருடத்தில் 2006ம் ஆண்டு தான் அவர் ஹீரோவாக நடித்த தலைநகரமும் ரிலீஸ் ஆனது. இந்த சண்டைக்கு பின்னர் மாதவனும் சரி, சுந்தர்.சியும் சரி வடிவேலுவுடன் இணையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.