இந்த தலைப்பும் போச்சே!... ஒரு மனுஷன் நடிக்காம இருந்தா இப்படியா?... புலம்பும் வடிவேலு....
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்து வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.. இப்படம் பற்றி இயக்குனர் சுராஜ் கடந்த 2 வருடங்களாக பேசி வருகிறார். ஆனால், இப்படத்தின் தலைப்பை அவர் முறையாக பதிவு செய்யவில்லை. இ
தில், பிரச்சனை என்னவெனில், பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷை வைத்து ‘நாய் சேகர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. மேலும், இந்த தலைப்பை முறையாக அவர்கள் பதிவும் செய்துள்ளனர். எனவே, வடிவேல் கோரிக்கை வைத்தும் அந்த தலைப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
அதோடு, அதே தலைப்போடு சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ என ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர்கள் வெளியிட்டு விட்டனர். இதைக்கண்டு ‘இது வடிவேல் படம் தலைப்பாயிற்றே’ என ரசிகர்களே அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இந்த தலைப்பு வடிவேலுக்கு மட்டுமே பொருந்தும். சதீஷ்க்கு காமெடியும் வராது ஒன்னும் வராது என கோபத்துடன் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், சுராஜ் – வடிவேலு இணையும் புதிய படத்திற்கு வேறு தலைப்பு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது வடிவேல் ஏற்று நடித்து மிகவும் பிரபலமான நேசமணி என்கிற தலைப்பும் யோகிபாபுவுக்கு சென்றுவிட்டது. யோகிபாபு, ஓவியா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வடிவேலு.
பல வருடங்களுக்கு பின் #SaveNesamani என்கிற ஹேஷ்டேக் கூட டிவிட்டரில் கடந்த வருடம் உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.
ஏற்கனவே நாய் சேகர் தலைப்பு சதீஷுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்கிற தலைப்பு யோகிபாபுவுக்கு சென்றுவிட்டது வடிவேலுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.