தமிழ் சினிமா தவறவிட்ட சேஷூ!.. மதிக்காத வடிவேலு, யோகி பாபு!.. மனசு வைப்பாரா சந்தானம்?!..

by சிவா |
lakshmi
X

லொள்ளு சபா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலம் அடைந்தவர் லட்சுமி நாராயணன் என்கிற சேஷு. சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று மரணமடைந்தார். தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் இருக்கிறது. அப்படி இருக்கையில், சில காலங்களுக்கு முன்னர் தான் தனது காமெடி மூலம் பிரபலமாக துவங்கினார் சேஷு. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர்.

வடிவேலு, விவேக் ஆகியோருன் தங்களுக்கென ஒரு தனி கேங் வைத்திருந்தனர். துவக்கத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக நின்றவர் யோகிபாபு. இவர்கள் யாருமே சேஷூவை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே, சந்தானம் நடிக்கும் படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: கேப்டன் மகனை எதிர்த்து வடிவேலுவா? அதிரடியான முடிவை எடுத்த வைகைபுயல்.. இதுதான் விஷயமா?

திரைப்படங்களில் ரவுடி கதாபாதிரங்களை குறிவைத்து காமெடி செய்து வந்த இவரது படங்கள் இப்போது தான் ரசிகர்களிடையே பிரபலமானது. சந்தானம் ஹீரோவாக நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பரதநாட்டியல்லாம் ஆடி அதகளப்படுத்தினார். சினிமாவில் பெரிய இடத்தை சேஷூ பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பிரியாவிடை கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்தேரிய இந்த சோக நிகழ்வு சேஷுவின் குடும்பத்தாரை மட்டுமல்லாது அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

chesu

தான் வசிக்கும் பகுதியைச்சுற்றி எவரேனும் பசியோடு வாடும் தகவல் தெரிந்தாலோ, கல்வி செலவிற்கு கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவர்கள் பற்றிய செய்தியை தெரிந்து கொண்டாலோ முதல் ஆளாக உதவ சென்று விடுவாராம். அதேபோல் தன்னை போன்ற சக காமெடி நடிகர், நடிகைகளுக்கு பிரச்சனை என தெரிந்தால் அவர்களை உடனே நேரில் சென்று சந்தித்து தீர்வு குறித்த அறிவுரைகளை சொல்லியும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருவாராம்.

இதையும் படிங்க: என் வாழ்க்கையில முக்கியமானவன் நீதான்!.. விஜயகாந்தே நெகிழ்ந்து சொன்ன இயக்குனர் யார் தெரியுமா?…

கொரானா பேரிடர் காலத்தில் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காதவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை கண்கானிப்பாராம். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பற்றி தனது நட்பு வட்டாரத்திற்கு தெரியபடுத்தி அவர்களுக்கு உதவுவாராம். அதோடு, பயணடைந்தவர்களின் விவரங்களை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் உதவியவர்களுக்கு அனுப்பிவைப்பாராம். ஆனால், 10 லட்ச ரூபாய் பணம் இல்லாமல்தான் இப்போது இறந்து போயிருக்கிறார்.

இப்படிப்பட்ட சேஷு உடன் லொள்ளு-சபாவில் நடித்து இன்று தமிழ் திரைவுலகில் முக்கிய இடத்தில் இருந்து வரும் சந்தானம், யோகி பாபு போன்றோர் அவரின் குடும்ப பொருளாதார நிலையை பற்றி அறிந்து கொண்டு தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்பதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story