தமிழ் சினிமாவில், முன்னணி வரிசையில் முக்கிய இடத்தில் டாப் ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். நல்ல நடிகராக மட்டுமின்றி, சிறந்த மனிதராக, பண்பாளராக அடையாளம் காணப்படுபவர். ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வம் கொண்டவர். சமீபத்தில்தான், ஒடிசா, அஸ்ஸாம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பைக்கில் மாதக்கணக்கில் சுற்றுப்பயணங்களில் இருந்து திரும்பி வந்திருக்கிறார்.
விரைவில், மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் குமார் நடிக்கும் ஏகே 63 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே, இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில், அஜித் தந்தை சுப்பிரமணியன் மறைவால், படப்பிடிப்பு தள்ளிப்போனது.
அஜித் படங்களில் வடிவேலு
தமிழ் சினிமாவில், முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. அஜீத் நடித்த சில படங்களில், துவக்கத்தில் வடிவேலு நடித்தார். ஆசை, ராஜாவின் பார்வையிலே, ஆனந்தப் பூங்காற்றே, ராஜா, தொடரும், பவித்ரா, மைனர் மாப்பிள்ளை, ராசி உள்ளிட்ட படங்களில், காமெடி கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு அதுவும் 20 ஆண்டுகளாக அஜீத் படங்களில், வடிவேலு நடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அஜித் படங்களில், வடிவேலு நடித்த போது நண்பனாக, மாமாவாக கேரக்டர் தரப்பட்டதால், அஜித்தை வாடா, போடா, மாப்ளே, மச்சான் என ஒருமையில் பேசி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகும், அதே பாணியில் அஜித்தை ஒருமையில் அழைத்து பேசி இருக்கிறார்.
அறிவுரையை அலட்சியப்படுத்திய வடிவேலு
இது அஜித்குமாருக்கு பிடிக்கவில்லை. சக நடிகர்களும், படத்தின் இயக்குநரும் இதுகுறித்து வடிவேலுவுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். படத்தின் ஹீரோ அவர். முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். அவரிடம் மரியாதையாக பேசுங்கள் என அவர்கள் கூறியதை பொருட்படுத்தாமல், வடிவேலு, அஜித்குமாரிடம் மரியாதை இன்றி நடந்திருக்கிறார்.
வாய்ப்பை இழந்த வடிவேலு
இதையடுத்துதான், தனது படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க வடிவேலு வேண்டாம் என அஜித் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விட்டாராம். அதனால்தான், வடிவேலு அஜித் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் என்று, கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…