More
Categories: Cinema History latest news

சுயரூபத்தை காட்டிய வடிவேலு!.. தக்க பதிலடி கொடுத்த விவேக்!.. என்ன நடந்தது தெரியுமா?..

எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் தமிழ் சினிமா உலகில் இருந்தாலும் அவர்களுள் வடிவேலு , விவேக் இருவர்களின்  காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம்  உள்ளனர். இவர்கள் காமெடி என்றால்  ஒரு தனித்துவமான அர்த்தம் இருக்கும். அதே போன்று விவேக்கின் காமெடி சமூக சிந்தனை கொண்ட வழியில் பயணிக்கும். இவரது நகைச்சுவை மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவைகளை கொண்டு சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைப்பவர். ஆதலால் இவருக்கு “சின்னக் கலைவாணர்” என்றும் “ஜனங்களின் கலைஞன்” என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

வடிவேலுவின் காமெடி வேறு ஒரு ட்ராக்கில் இருக்கும். வசனங்களை பேசி நடிப்பவர்கள் மத்தியில் வெறும் உடல் மொழியினால் நகைச்சுவையை வெளிபடுத்துவதில் வல்லவர். இந்த தனித்துவமே அவர்களுக்கு வெற்றியாக அமைந்தது. வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ”வைகைப்புயல்” என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.

Advertising
Advertising

vadivelu

என்னதான் திரை வாழ்க்கையில் நகைச்சுவையில் சிறந்தவராக இருந்தாலும் நிஜவாழ்க்கையில் வில்லனாகவே இருந்திருக்கிறார். விவேக் அளவிற்கு வடிவேலு கிடையாது என சொல்லும் வகையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. விவேக்கை பொறுத்தவரை தான் வளர்வது மட்டுமல்லாமல் தன்னுடன் இருப்பவர்களும் கூட சாதிக்க வேண்டும் என நினைப்பவர் .

அவருடன் நடித்த சக நகைச்சுவை நடிகர்களுக்கு முன்னேற வழி விட்டு சந்தோஷ படுவார். ஆனால் வடிவேலு தனக்கு அடிமையாக ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என நினைப்பார். அந்த வகையில் விவேக் உடன் நிறைய திரைப்படங்களில் சேர்ந்து நடித்த நடிகர் கொட்டாச்சி ஒரு சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.  ஒரு நாள் வடிவேலு , விவேக்கிடம் ”கொட்டாட்சியை எதற்கு  நீ முன்னேற வழி விடுகிறாய். அவன் தானாக முன்னேறட்டும்” என்று கூறியிருக்கிறார். அதற்க்கு விவேக் ” சினிமா துறையில் வாய்ப்பு நம்மை தேடி வருவது சுலபம் இல்லை.  அதனால நம்ம பண்றத பண்ணுவோம்” என்று கூறி வடிவேலுவின் வாயை அடைத்திருக்கிறார் .

vivek

அது மட்டுமல்லாமல் வடிவேலு தன்னிடம் இவ்வாறு பேசியதை விவேக்கே அவரிடம் கூறினாராம். அவருடைய கெட்ட எண்ணத்திற்கு வீணாக போவார் என்றும் அவர் கூறியுள்ளார்.  அது உண்மையாகும் வகையில் நீண்ட காலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின்னர் சில கால இடைவெளிக்கு பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு  வெற்றியை கொடுக்கவில்லை.

Published by
Sathish G

Recent Posts