Cinema History
ஒரு படத்துக்கு பல சம்பளம்!.. வடிவேலு செஞ்ச அட்ராசிட்டியில் கண்ணீர்விட்ட தயாரிப்பாளர்கள்…
மதுரையை சேர்ந்த வடிவேலு சினிமா ஆசையில் சென்னை வந்து ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபிடி வேலையை செய்தவர். அவர் மூலம்தான் ராஜ்கிரண் தயாரித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடித்தார். அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் மாறினார்.
கவுண்டமணியுடன் சில படங்களில் நடித்த வடிவேலு கவுண்டமணியின் மார்க்கெட் குறைந்தபோது அந்த இடத்தை பிடித்தார். பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். கவுண்டமணிக்கு எப்படி ரசிகர்கள் இருந்தார்களோ அப்படி வடிவேலுவுக்கும் ரசிகர்கள் உருவானார்கள். ஒருகட்டத்தில் பல படங்களின் வெற்றிக்கே காரணமாக இருந்தார்.
இதையும் படிங்க: மாமன்னன் ஆன பின்னாலயும் அந்த காஜி போகலையே!.. கதாநாயகியை நினைத்து புலம்பிய வடிவேலு!..
அதேநேரம், தான் நடிக்கும் படங்களில் எல்லாவற்றிலும் தலையிட்டார். இயக்குனர் ஒரு வசனம் சொன்னால் வடிவேலு ஒன்று பேசுவார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார். குறைவான நேரம் மட்டுமே நடிப்பார். ஆனால், அதிக சம்பளம் கேட்பார். வடிவேலுவை விட்டால் வேறு வழியில்லை என்பதால் தயாரிப்பாளர்களும் பொறுத்துக்கொண்டனர்.
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்தபோது இயக்குனருடன் பிரச்சனை ஏற்பட்டு, ரெட் கார்டு வாங்கி 4 வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதன்பின் நாய்சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால், படம் ஓடவில்லை. இப்போது மாமன்னன் திரைப்படம் அவருக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: வடிவேலு யார் வாய்ப்பையும் தட்டி பறிக்கல… தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்…
ஒருபக்கம், வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்த போண்டா மணி, முத்துக்காளை, பாவா லட்சுமணன் என பலரும் வடிவேலு எவ்வளவு மோசமானவர் என பேட்டிகளில் சொன்னார்கள். வடிவேலுவுடன் நடித்த ஒருவர் கூட வடிவேலுவை பாராட்டி பேசவே இல்லை என்பதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா செய்தியாளர் பிஸ்மி ‘வடிவேலு ஒரு படத்தில் நடிக்கும்போது ஒரு சம்பளம் பேசுவார். பாதி நடித்த பின் சம்பளத்தை உயர்த்தி கேட்பார். டப்பிங் பேச கூப்பிடும்போது மேலும், அதிக சம்பளம் கேட்பார். அதை தரவில்லை எனில் டப்பிங் பேச மாட்டேன் என்பார். தயாரிப்பாளர்களும் வேறுவழியின்றி அதை கொடுத்துவிடுவார்கள். இப்படி பல படங்களில் தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்துள்ளார்’ என பேசியிருந்தார்.
இதையும் படிங்க: வடிவேலு சொன்ன ஒரு வார்த்தை!.. குடிப்பழக்கத்தை விட்ட முத்துக்காளை!.. இவ்வளவு நடந்திருக்கா!…