வடிவேலுவின் இரண்டாவது இன்னிங்ஸ் சரியான தொடக்கமா நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்... தெறித்து ஓடும் ரசிகர்கள்...

naai sekar
வடிவேலு நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் இன்று திரைக்கு வந்திருக்கிறது. ஆனால் இப்படம் உண்மையாகவே வடிவேலுவின் கம்பேக் படம் தானா எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை தான். அவரின் டெம்பிளேட்களை வைத்தே மீம்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் ஷிவானி நாராயணன், சிவாங்கி, ஆனந்தராஜ், மனோபாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தினை சுராஜ் இயக்கி இருக்கிறார்.
வடிவேலு ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். ரொம்ப நாட்கள் கழித்து அவரை திரையில் பார்ப்பதே அவர்களுக்கு போதும் என்பதால் முதல் பகுதி காமெடி பரவாயில்லை. இரண்டாம் பகுதியில் முழுக்க முழுக்க இயக்குனரின் படமாக இருப்பதாக கூறுகின்றனர்.
அந்த பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம் என இளைஞர்கள் கூட்டம் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே கொடுத்து வருகின்றனர். ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகரித்தால் படத்தின் வசூல் நன்றாக அமையும் எனக் கூறப்படுகிறது.