பாரதிராஜாவால் படப்பிடிப்பில் அழுத பிரபல நடிகை.... கடும் கோபத்தில் தான் படத்தில் நடித்தாராம்....!
ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் மண் மனம் மாறாத கிராமத்து கதைகள் மூலம் பிரபலமான இயக்குனர் என்றால் அது பாரதிராஜா தான். இவரின் படங்களை பார்க்கும்போது நாமும் அந்த கதையில் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும் அளவிற்கு அவ்வளவு தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் இருக்கும்.
இப்படிப்பட்ட ஒரு பிரபலமான இயக்குனரால் பிரபல நடிகர் ஒருவர் அழுதுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான் சமீபத்தில் நடிகை வடிவுக்கரசி தனது முதல் மரியாதை படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் கூறியதாவது, "சிவாஜி மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது.
அந்த சமயத்தில் தான் முதல் மரியாதை படத்தில் அவருடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நான் ரொம்ப சந்தோஷமா ஒப்புக்கொண்டேன். என்னுடைய நிறமும் தோற்றமும் கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பதாக கூறி தான் இயக்குனர் என்னை தேர்வு செய்தார். இந்த படத்திற்காக தான் இரண்டு மூக்கும் குத்தினேன்.
ஆனால் அதை பற்றியெல்லாம் நான் கவலை படவில்லை காரணம் எனக்கு சிவாஜி கூட ஜோடியா நடிச்சா போதும்னு இருந்தது. நான் ஷாட்டுக்கு தயாரானதும் இயக்குனர் என்கிட்ட டயலாக் சொன்னார். இது யார் பேசுற டயலாக்னு கேட்டேன். நீதான் என சொன்னதும் எனக்கு அழுகையே வந்துடுச்சு. என்னால இப்படி வீரியமா பேசமுடியாது. தங்கப்பதக்கம் கே.ஆர்.விஜயா மாதிரி நடிக்கலாம்னு நினைத்தேன்.
இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துட்டாரேனு அழுதேன். அதன் பிறகு பாரதிராஜா மீது இருந்த கோவத்தில்தான் ஒவ்வொரு சீனும் நான் நடித்தேன். ஆனா அந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. முதல் மரியாதை என் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த படம் . இப்போது அந்த படத்தை பார்க்கும் பொழுதெல்லாம். இந்த காட்சியெல்லாம் இன்னும் அழகா நடித்திருக்கலாமே என எண்ணியதுண்டு" என தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துள்ளார் முன்னணி நடிகை வடிவுக்கரசி.