More
Categories: Cinema News

ஏகப்பட்ட தூக்க மாத்திரை!.. தற்கொலைக்கு முயற்சி பண்ணேன்!.. நடிகை சொன்ன பகீர் தகவல்!…

பிரபல நடிகையான வடிவுக்கரசி தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களைப் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.

வெள்ளித்திரையில் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் வடிவுக்கரசி. ஆரம்பத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு ஸ்கூலில் பாடம் எடுக்கும் ஆசிரியராக இருந்திருக்கின்றார். டீச்சராக இவரது பணியை தொடங்கிய நிலையில் அவருக்கு 70 ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள்.

Advertising
Advertising

இது குடும்பத்தை சமாளிக்க போதாது என்ற பிறகு துணிக்கடையில் வேலை செய்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் ஒரு மேனேஜ்மென்டில் ஹவுஸ்கீப்பிங் வேலையும் செய்துள்ளார். ஆரம்பத்தில் வடிவுக்கரசியின் குடும்பம் பெரிய அளவில் வசதியாக தான் இருந்தது. அவர் அப்பா திரைத்துறையில் இருந்தார். சினிமாவில் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் வாழ்க்கையே மாறிப்போனது.

அதன் பிறகு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் பேப்பரில் நடிகைக்கு ஆட்கள் தேவை என்று வந்த விளம்பரத்தை பார்த்து நடிக்க சென்றார். முதலில் காதல் காட்சிகளில் நடிக்க வராது, டான்ஸ் ஆட வராது என்று இருந்ததால் அம்மா மற்றும் அக்கா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் படிப்படியாக உயர்ந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார். அதன் பிறகு இவர் திருமணம் செய்து கொண்ட வாழ்க்கையும் இவர் எதிர்பார்த்தபடி இல்லை. இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சனை ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் இவர் தனது ஒரே மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். மகளின் குழந்தையை தற்போது இவர் தான் வளர்த்து வருகிறாராம்.

சின்னத்திரையில் சீரியலில் நடித்து வரும் இவர் சமீபத்தில் youtube ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது தன் வாழ்வில் நடந்த பல கசப்பான விஷயங்களை பகிர்ந்திருந்தார். ஒரு முறை தன் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டத்தால் மனமுடைந்து பல தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலை முயற்சி செய்தேன். உடனே என் வீட்டில் இருந்தவர்கள் ஸ்ரீ பிரியாவுக்கு போன் செய்து விட்டார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அடித்துப் பிடித்து வீட்டுக்கு வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரவு முழுதும் கண்விழித்து பார்த்துக்கொண்டார். மறுநாள் மருத்துவர்கள் நான் சரியாகி விட்டேன் என்று கூறிய பிறகுதான் அங்கிருந்து சென்றார். உடனே வீட்டிற்கு கூட செல்லாமல் அருகில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலுக்கு சென்று அங்கு எனது பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு பின்னர் தான் வீட்டிற்கு சென்றார். அந்த மனசு யாருக்கு வரும். இதை நட்பு என்று கூற முடியாது, நட்பையும் தாண்டி ஒரு உன்னதமான உறவு என்று அவர் பகிர்ந்து இருந்தார்.

Published by
ramya suresh