கூப்பிட்டு அசிங்கப்படுத்தினாங்க!.. ரஜினி பண்ணத மறக்கவே முடியாது!. ஃபீலிங்ஸ் காட்டும் வடிவுக்கரசி...

by சிவா |   ( Updated:2023-07-26 22:14:37  )
arunachalam
X

தமிழ் சினிமாவில் 70களின் இறுதியில் அறிமுகமானவர் நடிகை வடிவுக்கரசி. கன்னி பருவத்திலே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதேபோல் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் முற்றிலும் வேறுமாதிரி பக்கா மாடர்ன் பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பல திரைப்படங்களில் வில்லியாக நடித்து பெண்களின் கோபத்தை பெற்றவர் இவர்.

vadvu

இப்போது சீரியலிலும் வில்லியாக கலக்கி சீரியல் ரசிகைகளின் சாபத்தை வாங்கி வருகிறார். ரஜினியின் அருணாச்சலம் படத்தில் கூன் விழுந்த மோசமான மூதாட்டியாக நடித்திருப்பார். மேலும், ‘வெளிய போடா அனாத நாயே’ என திட்டி ரஜினியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடும் வேடம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கும் இவர் ஆளானார்.

இதையும் படிங்க: கடைசில கமல் சொன்னதுதான் நடந்தது! பாலசந்தர் ஆசைப்பட்டும் நிறைவேற்றாத ரஜினி

படம் வெளியாகி தியேட்டரில் படம் ஓடும்போது ரஜினி வெறியர்கள் வடிவுக்கரசி வரும்போதெல்லாம் திட்டிய சம்பவமும் நடந்தது. இதையெல்லாம் கேள்விப்பட்ட வடிவுக்கரசி ‘இப்படி ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிவிட்டோமே’ என நினைத்தார்.

vadivu

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வடிவுக்கரசி ‘அருணாச்சலம் வெற்றிவிழாவில் நான் கலந்து கொண்டேன். படத்தில் நடித்த எல்லோரும் ரஜினி தனது கையால் ஷூல்ட் கொடுத்தார். ஆனால், என்னை யாரும் அழைக்கவே இல்லை. எனக்கு புரிந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் என் மீது கோபமாக இருப்பதால்தான் என்னை அழைக்கவில்லை என நினைத்தேன்.

என் அம்மாவிடம் ‘அசிங்கப்படுத்திட்டாங்க.. வாம்மா இங்கிருந்து போயிடலாம்’ என சொன்னேன். ஆனால், கூட்டத்தில் என்னால் வெளியே போகவும் முடியவில்லை. எனக்கு அழுகையே வந்துவிட்டது. அப்போது ரஜினி ‘இந்த படத்தில் வடிவுக்கரசி’ என பேச துவங்கினார். அவரையே பார்த்து கொண்டிருந்தேன். ‘வடிவுக்கரசி சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு ஷீல்ட் இருக்கட்டும். ஆனா, நான் என் கையால இந்த தங்கச்சங்கிலியை அவருக்கு கொடுக்கிறேன்’ என சொல்ல, என் பெயரை அழைக்காமலேயே மேடைக்கு ஓடிவிட்டேன். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது’ என உருகியிருந்தார்.

இதையும் படிங்க: எவ பேச்சக்கேட்டு என்னை தூக்குனீங்க!.. பாரதிராஜாவிடம் எகிறிய வடிவுக்கரசி.. படப்பிடிப்பி்ல் நடந்த பஞ்சாயத்து!…

Next Story