சிவகார்த்திகேயனோடு சேர்ந்து அதை பண்ணணும்!...வில்லி நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா?!...

by Rohini |
siva_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். தொகுப்பாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற மனிதராக இருக்கிறார்.

siva1_cine

நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என் பன்முக திறமைகளால் அனைவரையும் ரசித்து வைத்துக் கொண்டிருக்கிறார். எப்பேற்பட்ட நடிகராக இருந்தாலும் தனக்கே உரித்தான நகைச்சுவையால் ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதையுன் படிங்கள் : பொன்னியின் செல்வனில் இவ்ளோ பெரிய கூட்டம்…ஒரே நாளில் மூணு சீன்….சிலாகிக்கிறார் பார்த்திபன்

siva2_cine

இப்படி பட்ட சிவகார்த்திகேயனுடன் எனக்கு நடிக்கனும்னு ரொம்ப ஆசையாக இருக்கிறது என பிரபல வில்லி நடிகை தெரிவித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. நடிகை வடிவுக்கரசி. இவரின் வில்லத்தனமான நடிப்பை முத்து திரைப்படத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியவர்.

siva3_cie

இதையும் படிங்கள் : கோப்ரா இயக்குனருக்கு ரெட் கார்டு!…வெற்றிமாறனுக்கு செக் வைத்த தாணு….

எனக்கு காமெடி என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இப்போது சிவகார்த்திகேயன் நன்றாக நடிக்கிறார்.கூடவே நகைச்சுவையும் செய்து நடித்து கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து எனக்கும் காமெடி பண்ண வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் என்னை பார்த்தாலே வில்லியாக தெரிகிறதோ இல்லையோ அப்படி பட்ட கதாபாத்திரங்களாகவே அமைகின்றன. காமெடியும் நன்றாக பண்ணுவேன் என கூறினார்.

Next Story