கலைஞர்-எம்.ஜி.ஆரின் மோதலில் பலியான நடிகர்...! 20 படங்களின் வாய்ப்பு பறிக்கப்பட்ட சம்பவம்...
தமிழ் சினிமாவில் சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் இவர்களுக்கு அப்புறம் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகர் என்று கலைஞரால் பாராட்ட பெற்றவர் நடிகர் வாகை சந்திரசேகர். இவரின் படங்கள் வெள்ளி விழா வரை கொண்டாடி இருக்கிறது. தனது எதார்த்தமான நடிப்பால் பேரும் புகழும் பெற்று விளங்கினார்.
மேலும் விஜயகாந்த் காலத்தில் இவரும் உச்சத்தில் இருந்தவர். குறிப்பாக சம்சாரம் மின்சாரம், ஊமை விழிகள் போன்ற படங்கள் இவரின் பெருமையை சாற்றும் படங்களாக அமைந்தன. ஒரு சமயம் கலைஞர் இவரை அழைத்து தன்னுடைய படைப்பான தூக்குமேடை என்ற கதையில் நீ நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி
இதையும் படிங்கள் : ரஜினிக்கு தொடர்ந்து அம்மாவாக நடித்து தோல்வியை சந்தித்த படங்கள்……! யார் அந்த நடிகை தெரியுமா…?
இதில் நடித்தால் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு வாகை சந்திரசேகர் நீங்கள் கூப்பிட்டதே போதும் எதுவானாலும் சந்திக்க தயார் என கூறினாராம். அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த சமயம் ஒரு அமைச்சர் இவரை அழைத்து நீ கலைஞர் படத்தில் நடிக்க கூடாது என சொல்ல
இவர் சம்மதிக்கவில்லையாம். அந்த சமயம் இவர் கையில் 22 படங்கள் இருக்க இந்த காரணத்தால் 20 படங்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டதாம். அதன் பின் கிட்டத்தட்ட தூக்கு மேடை நடித்து 2 வருடங்கள் கழித்து தன்னுடைய பழைய நிலைமைக்கு வந்தாராம் வாகை சந்திரசேகர்.