படப்பிடிப்பு தளத்தில் விஜயகாந்த் செய்த குறும்புகள்… நினைவுகளை பகிர்ந்த பிரபல நடிகர்….!

Published on: December 21, 2021
vijayakanth
---Advertisement---

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். அந்த சமயத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெற்றி விழா கண்டன. அவ்வளவு ஏன் ரஜினி கமலுக்கே டாஃப் போட்டியாளராக விஜயகாந்த் இருந்தார் என்றால் பார்த்த கொள்ளுங்கள்.

rajini-vijayakanth
rajini-vijayakanth

மக்கள் அனைவரும் இவரை கேப்டன் என்று தான் அழைப்பார்கள். ரஜினி கமலுக்கு இணையாக விஜயகாந்திற்கும் ரசிகர்கள் இருந்ததால் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையில் அரசியலில் களமிறங்கினார். அதேபோல் ரசிகர்களும் அவரை தேர்தலில் வெற்றி பெற செய்தார்கள். அதன் பலனாக அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற்று சட்டசபைக்கு சென்றார்.

ஒரு நடிகராக படங்களிலும் சரி அரசியல்வாதியாக பொது மேடைகளிலும் சரி இதுவரை விஜயகாந்தை ஒரு டெரரான கோபக்காரராகவே மக்கள் பார்த்துள்ளார்கள். ஆனால் அவருக்குள்ளும் ஒரு குழந்தை மனது இருந்துள்ளது. அதை இதுவரை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம்.

vagai chandrasekar
vagai chandrasekar

ஆனால் படப்பிடிப்பு தளங்களில் விஜயகாந்த் நிறைய குறும்புகள் செய்வாராம். அந்த வகையில் விஜயகாந்த், “ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒட்டு மீசை தாடியுடன் நடிகர்கள் தயாராக இருப்பார்களாம். கிளாப் அடித்ததும் மீசையை பிச்சு எடுத்துட்டு கலாட்டா செய்வாராம். அதேபோல் அவரே யாருக்கும் தெரியாமல் விசில் அடித்து விட்டு எவன்டா அது விசில் அடிச்சது? அமைதியா இருங்கடா என அதட்டுவாராம்.

அதுமட்டுமல்ல சின்ன சின்ன கற்களை எடுத்து குறிபார்த்து அடித்து விட்டு எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருப்பாராம்” இப்படி இன்னும் நிறைய சேட்டைகளை செய்துள்ளாராம் விஜயகாந்த். இந்த தகவல்களை விஜயகாந்த் உடன் பல படங்களில் நடித்துள்ள நடிகர் வாகை சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த மனுசனுக்குள்ள இப்படி ஒரு குழந்தை மனசா?

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment