கவிப்பேரரசு என்று போற்றப்படும் வைரமுத்து தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவரது தமிழுக்கு மயங்காத நபர்களே இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு தனது கவித்துவமான தமிழ் புலமையால் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் வைரமுத்து.
வைரமுத்து 1980 ஆம் ஆண்டு வெளியான “நிழல்கள்” திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். அத்திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய “பொன்மாலை பொழுது” என்ற பாடல் இன்று வரை இசை ரசிகர்களால் விரும்பப்படும் பாடலாக அமைந்தது. இவ்வாறு தனது முதல் பாடலலிலேயே தடம் பதித்த வைரமுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத பாடலாசிரியராக உருவானார்.
இந்த நிலையில் தான் முதன்முதலில் அறிமுகமான “நிழல்கள்” திரைப்படத்தின் இயக்குனரான பாரதிராஜாவிடம் மிகவும் வித்தியாசமான முறையில் வைரமுத்து வாய்ப்பு கேட்ட சுவாரஸ்ய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் பி.எஸ்.நிவாஸின் இயக்கத்தில் “கல்லுக்குள் ஈரம்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பாரதிராஜாவின் அலுவலத்தில் அவரை சந்திக்க வந்தார் வைரமுத்து. அப்போது வைரமுத்து, தான் எழுதியிருந்த “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” என்ற கவிதை நூலை பாரதிராஜாவின் கொடுத்தார்.
அதன் பின் பாரதிராஜாவிடம் வாய்ப்புக் கேட்ட வைரமுத்து “தமிழ் சினிமாவில் எல்லா துறையும் மாறிவிட்டது. ஒளிப்பதிவு மாறிவிட்டது, நடிப்பு மாறிவிட்டது, இசை மாறிவிட்டது, வசனத்தின் மொழி மாறிவிட்டது, ஆக தமிழ் சினிமாவில் எல்லாமே மாறிவிட்டது. ஆனால் மாறாமல் இருப்பது திரைப்பாடல்களின் மொழி மட்டுமே. எனக்கு வாய்ப்பு கொடுத்தால், அந்த திரைப்பாடல்களின் மொழியை என்னால் கொஞ்சம் மாற்றமுடியும் என்று நம்புகிறேன்” என கூறினாராம். வைரமுத்துவின் இந்த பேச்சை கேட்ட பாரதிராஜா கொஞ்சம் மயங்கித்தான்போனாராம்.
இதையும் படிங்க: “சீக்கிரம் ஷூட்டிங்க முடிங்க”… பந்தா காட்டிய சத்யராஜ்ஜை பங்கமாய் கலாய்த்த கவுண்டமணி…
இதனை தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு வைரமுத்துவின் கவிதை நூலை படித்துப்பார்த்த பாரதிராஜா, இந்த இளைஞனிடம் திரையிசை பாடல்களின் மொழியை மாற்றக்கூடிய வல்லமை இருப்பதாக நினைத்தார். அதன் பிறகுதான், தான் இயக்கிய “நிழல்கள்” திரைப்படத்தில் வைரமுத்துவுக்கு பாடல் எழுத வாய்ப்பளித்தார் பாரதிராஜா.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…