தமிழ் இசை அமைப்பாளர்களின் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். சினிமா வட்டாரத்தில் அவரை இசை புயல் என பலரும் அழைப்பதுண்டு அதற்கு காரணமும் உண்டு.தமிழ் சினிமாவிற்கு ஏ.ஆர் ரகுமான் அறிமுகமாவதற்கு முன்பு இளையராஜா எம்.எஸ் விஸ்வநாதன் போன்ற இசை ஜாம்பவான்கள் இருந்தனர். ஆனால் அவர்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு புதிய வகை இசையை ஏ.ஆர் ரகுமான் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் அதிக பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதியவர் கவிஞர் வைரமுத்து.
ஏ.ஆர் ரகுமான் குறித்து வைரமுத்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது முக்கியமான தகவல் ஒன்றை கூறியிருந்தார்.பெரும்பாலும் தமிழ் சினிமாவில் உள்ள பலரும் கூட இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் முதன்முதலாக இசையமைத்த படம் ரோஜா என்றுதான் நினைத்துள்ளனர். சொல்ல போனால் மணிரத்தினம் வாய்ப்பு கொடுத்த ரோஜா திரைப்படம்தான் தனியாக ஏ.ஆர் ரகுமான் முதன்முதலாக இசையமைத்த படம்.
ஏ.ஆர் ரகுமானுக்கு வந்த வாய்ப்பு:
ஆனால் அதற்கு முன்பே வேறொரு படத்திற்கும் இசையமைத்துள்ளார் ஏ.ஆர் ரகுமான். வைரமுத்து பாடல் வரிகள்,வசனம் ஆகியவை எழுதி இயக்குனர் அமீரஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வணக்கம் வாத்தியாரே.இந்த திரைப்படத்தை உருவாக்கும் பொழுது இதற்கு இசையமைக்கும் அளவிற்கு அதிக பணம் தயாரிப்பாளரிடம் இல்லை.
எனவே அப்பொழுது இளையராஜா குழுவில் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்த ஏ.ஆர் ரகுமானை அழைத்து கீ போர்டை மட்டும் வைத்து படத்திற்கான மொத்த இசையையும் இசையமைக்க முடியுமா? என கேட்டுள்ளனர் அதற்கு ஒப்புக்கொண்ட ஏ.ஆர் ரகுமான் ஒரே நாளில் உட்கார்ந்து 8 மணி நேரத்தில் அந்த படத்திற்கான மொத்த இசையையும் போட்டுக் கொடுத்தார்.
பாடல்களை பொறுத்தவரை அந்த படத்தில் வி.ஆர் சம்பத்குமார் அவர்களும் சேர்ந்து பணி புரிந்து இருந்தார். இருந்தாலும் ரோஜாவிற்கும் முன்பே ஏ.ஆர் ரகுமானின் இசையமைத்த படமாக வணக்கம் வாத்தியாரே திரைப்படம் உள்ளது.
இதையும் படிங்க: கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததால் எம்ஜிஆர் படவாய்ப்பை இழந்த நடிகர்! – இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா?
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…