தேவா இசையமைத்த இந்த ஹிட் பாடலுக்கு வைரமுத்துவால் வந்த பிரச்சனை… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
கடந்த 2000 ஆம் ஆண்டு முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து வேற லெவல் ஹிட் அடித்த திரைப்படம் “வெற்றிக்கொடி கட்டு”. இத்திரைப்படத்தை சேரன் இயக்கியிருந்தார்.
தேவாவின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆனது. குறிப்பாக இதில் இடம்பெற்றிருந்த “கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” பாடல் இப்போதும் மிகப் பிரபலமான பாடலாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் இப்பாடல் பதிவின்போது ஏற்பட்ட சிக்கல் குறித்து தனது பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் தேவா பகிர்ந்துகொண்டுள்ளார்.
“கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு. அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசன்ட் வாட்ஸ் பவரு” என்று ஒரு டம்மியான பல்லவியை எழுதியிருந்தாராம் தேவா. அதன் பின் இந்த வரிகளை சேரன் வைரமுத்துவிடம் கொண்டுசென்றிருக்கிறார். அவரிடம் “இது போன்றுதான் பாடல் அமையவேண்டும்” என கூறினாராம் சேரன்.
அதற்கு வைரமுத்து “நான் வேறு ஒரு பல்லவி எழுதித் தருகிறேன். இதில் கலரு, பவரு போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கிறது” என கூறினாராம். அதற்கு சேரன் “நீங்க மட்டும் 50 கேஜி தாஜ்மஹால்ன்னு பாட்டு எழுதுனீங்களே. அது மட்டும் என்னவாம்” என கேட்க அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்ததாம். ஒரு கட்டத்தில் வைரமுத்து பாடல் எழுத மறுத்துவிட்டாராம். அதன் பிறகுதான் அக்காலகட்டத்தில் பாடலாசிரியராக சினிமாவிற்குள் நுழைந்த பா.விஜய்யை எழுத வைத்திருக்கிறார் தேவா.
இதையும் படிங்க: பந்தா பண்ணிய சத்யராஜ்ஜை பங்கமாய் கவுண்ட்டர் அடித்து ஆஃப் செய்த கவுண்டமணி… வேற லெவல் காமெடி…
ஒரு வேளை இந்த பாடலை வைரமுத்து எழுதி, பல்லவியை மாற்றி இருந்தார் என்றால் இந்தளவுக்கு ஹிட் ஆகியிருக்குமா என்பது சந்தேகம்தான்…