பாடலாசிரியர்களை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் கண்ணதாசன் வாலிக்கு பிறகு பெரும் பாடலாசிரியர்,கவிஞர் என அறியப்படுபவர் கவிஞர் வைரமுத்து.
சினிமாவிற்கு வந்த காலம் முதலே வைரமுத்து எழுதும் பாடல்கள் அனைத்துமே நல்ல ஹிட் கொடுத்து வந்தன. முதன்முதலாக வைரமுத்துவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா.
பாரதிராஜா இயக்கிய நிழல்கள் என்கிற திரைப்படத்தில் வரும் இது ஒரு பொன் மாலைப்பொழுது என்கிற பாடல் வரிகள் தான் வைரமுத்து முதன்முதலாக தமிழ் சினிமாவில் எழுதிய பாடல் வரிகள்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்றார் வைரமுத்து. அதைத் தொடர்ந்து பல ஹிட் பாடல்களுக்கு இவர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாரதிராஜா பல திரைப்படங்கள் இயக்கிய பிறகு அவருக்கு கிழக்குச் சீமையிலே திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
சம்பளமே வாங்காத வைரமுத்து:
இதற்கு முன்னர் பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களை விட கிழக்கு சீமையிலே திரைப்படத்திற்கு பட்ஜெட் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அந்தப் படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரித்தார். அப்போது அந்த திரைப்படத்தில் பாடல் ஆசிரியர் வைரமுத்துவிற்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக நிர்ணயித்திருந்தார் எஸ் தானு.
எனவே வைரமுத்துவின் வீட்டிற்கு சென்று அவரிடம் அந்த சம்பளத் தொகையை கொடுத்தார் தயாரிப்பாளர். அதைப் பார்த்ததும் வைரமுத்துவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் தயாரிப்பாளரிடம் இதுக்குறித்து கூறும்போது இதற்கு முன்பு அவர் பாரதிராஜாவிற்கு வேலை பார்த்த எந்த படங்களிலும் அவருக்கு சம்பளத்தொகை என்பதே பாரதிராஜா கொடுத்ததில்லை
பாரதிராஜாதான் தன்னை அறிமுகப்படுத்தினார் என்பதால் அந்த நன்றி கடனுக்காக வைரமுத்து சம்பளம் வாங்காமலே அவருக்கு பாடல் வரிகளை எழுதி கொடுத்து வந்தார். அதன் பிறகு முதன்முதலாக பாரதிராஜாவின் படத்திற்கு எஸ்.தானு மூலமாக சம்பளம் வாங்கியுள்ளார் வைரமுத்து. எனவே இந்த விஷயங்களை கூறி வைரமுத்து அவரிடம் நன்றி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வீண் பிடிவாதத்தால் விக்ரமன் கொடுத்த தோல்வி படம்… ஆனா கடைசியில நடந்ததுதான் ஹைலைட்!
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…