வைரமுத்து நடிச்ச ஒரே திரைப்படம்.. பட்ஜெட் அதிகமானதால் தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்த இயக்குனர்..
தமிழ் சினிமாவின் பாடலாசிரியராகவும் சிறந்த கவிஞராகவும் விளங்கி வருபவர் கவிஞர் வைரமுத்து. ஒரு தவிர்க்க முடியாத கவிஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார் வைரமுத்து. கவிதை தொகுப்புகள், கட்டுரைகள், புதினம் என தன் எழுத்துக்களால் பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறார் கவிஞர்.
இந்திய அரசின் சிறந்த கவிஞருக்கான விருதை ஏழு முறை பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். இளையராஜாவுக்கும் ஏஆர்.ரகுமானுக்கும் ஆஸ்தான கவிஞராகவே வலம் வந்தார் வைரமுத்து. அவர்களின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்த அனைத்து பாடல்களும் யாரும் எதிர்பார்க்காத அளவில் வெற்றி பெற்றவை.
இதையும் படிங்க : 100% ரெடியா இருங்க.. அம்மணியின் அரசியல் பிரவேசம்!.. திரிஷாவின் ஜாதகத்தை கணித்த பிரபல இயக்குனர்..
ரோஜா, சங்கமம்,கருத்தம்மா, ஜோடி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்க படங்களாகும். எண்ணிலடங்கா பாடல்களை எழுதி எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். இப்படி பெருமைக்குரிய வைரமுத்துவை தன் படத்தில் நடிக்க வைக்க அந்த படத்தின் இயக்குனர் பட்ட கஷ்டம் என்ன என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஜோடி படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி அந்த படத்தில் வரும் காதல் கடிதம் தீட்டவே என்ற பாடலுக்கு முன் வரும் ஒரு காட்சியில் பிரசாந்த் தன் காதலுக்காக வைரமுத்துவிடம் டிப்ஸ் கேட்கும் சீன் தான் அது. அந்த சீனில் நடிக்க வைக்க பிரவீன் காந்தி வைரமுத்துவிடம் பலமுறை கெஞ்சியிருக்கிறார். ஆனால் வைரமுத்து முடியவே முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
பிரவீன் காந்தியோ படம் முடியட்டும் அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் என்று எட்டு மாத படப்பிடிப்பிற்கு பின் ஒரு வழியாக சம்மதம் வாங்கியிருக்கிறார். ஆனால் படத்தின் பட்ஜெட் சொன்னதை விட அதிகமானதால் அந்த படத்தின் வைரமுத்துவை நடிக்க வைக்க வைரமுத்துவிற்கான சம்பளத்தை தன் சம்பளத்தில் கழிக்க சொல்லிவிட்டாராம் பிரவீன் காந்தி. இப்படியாக ஜோடி படத்தில் அந்த ஒரு காட்சியில் வைரமுத்து நடித்திருக்கிறார்.