என் இஷ்டத்துக்குதான் நான் பாட்டு எழுதுவேன்!.. பாலச்சந்தரிடமே சொன்ன வைரமுத்து..

இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவரது படங்களுக்குப் பாடல்கள் என்றால் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். கவியரசர் கண்ணதாசனையே பாடல்கள் எழுதுவதில் பாடாய்படுத்தியிருப்பார். அதே போல வாலியை ஆளை விடுறா சாமின்னு சொல்ற அளவுக்கு ஆளாக்கி விட்டார்.

வைரமுத்துவையும் பாடாய்படுத்தி வர்ற வரைக்கும் விடாமல் பாடல்களை எழுதச் சொல்வார். அப்படிப்பட்ட பாலசந்தர் ஒருமுறை வைரமுத்துவிடம் நீ என்ன வேணாலும் எழுதுன்னு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். அந்தப் பாடல் மிகவும் பிரபலமானது.

1994ல் டூயட் சாக்ஸபோன் கலைஞரைப் பற்றிய படம். இதில் கத்ரி கோபால்நாத் சாக்ஸபோன் வாசித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு மிகப்பெரிய புகழும், பொருளும் கிடைத்ததாம்.

சண்டைக்காட்சிகள், பாடல் என எல்லாமே சூப்பர். இந்தப் படத்தில் உதவி இயக்குனர்கள் வலுக்கட்டாயமாக சொன்னதால் கத்திரிக்கா பாடல், சண்டைக்காட்சிகள் எல்லாம் சேர்த்தார்களாம். இந்தக் காட்சிகளை எல்லாம் சரண் தான் எடுத்தாராம். பாலசந்தர் கதைக்கு அவசியமானவற்றை மட்டும் எடுத்துள்ளார்.

duet

duet

'தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு' என்ற பாடல் பற்றிப் பார்ப்போம். இது வெஸ்டர்னில் ஏ.ஆர்.ரகுமான் ஆரம்பித்து கர்நாடிக் இசைக்கு மாற்றி இருப்பார். மிருதங்கத்தையே வெஸ்டர்னில் அழகாக பண்ணியிருப்பார். சாக்ஸபோன் அருமையாக வரும். இது மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் இது.

'எத்தனை சபைகள் கண்டோம். எத்தனை எத்தனை தடையும் கண்டோம். அத்தனையும் சூடம் காட்டி சுத்திப் போடு' என்று அழகாக எழுதியிருப்பார் வைரமுத்து. எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டது. சூடம் காட்டி சுத்திப் போடு என்று சொல்லி இருப்பார்.

'தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு சரக்கிருக்குது, முறுக்கிருக்குது மெட்டுப்போடு' என்று பல்லவி போட்டு இருப்பார்.

முதல் சரணத்தில் 'இது மக்கள் பாட்டு, தன்மானப்பாட்டு, கல்லூரிப் பெண்கள் பாடும் கன்னிப் பாட்டு, சபைகளை வென்று வரும் சபதம் போட்டு' என்று எழுதியிருப்பார்.

2வது சரணத்தில் 'இனி கண்ணீர் வேண்டாம். ஒரு கவிதை செய்க. எங்கள் கானங்கள் கேட்டு காதல் செய்க' என வரிகள் வரும்.

பின்னால மண்ணை, மலைகளைத் திருடுவாங்கப்பா என்பதை அப்போதே கவிஞர் அழகாக சொல்லி இருப்பார். நம் பூமி மேலே ஒரு பார்வை கொள்க. நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க... என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

இதையும் படிங்க... சூர்யாவுக்கு இதனால் தான் திமிரு அதிகமாகிடுச்சு!.. இயக்குனர்களின் சாபங்களை வாங்கிக் கட்டிக்கிறாரு!

படத்தில் சாக்ஸபோன் கலைஞன் தன்னம்பிக்கையை சொல்லும் பாடல். இந்தப் பாடல் எழுதும்போது கவிஞர் வைரமுத்து பாலசந்தரிடம் என் இஷ்டத்துக்கு எழுதுவேன். என்னை விட்டுருங்கன்னு சொன்னாராம். பாலசந்தரும் இதற்கு சரின்னு சொல்ல அப்படி உருவானது தான் இந்தப் பாடல். அதே நேரம் பாலசந்தருக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடித்து விட்டதாம். ஒரு சொல்லைக்கூட மாற்ற சொல்லவில்லையாம்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story