பிடிக்காத வரியால் வெறுப்பான கமல்... சமரசம் செய்த வைரமுத்து... ரசிகர்களைக் கொண்டாட வைத்த பாடல்...!

by sankaran v |
Kamal, Vairamuthu
X

Kamal, Vairamuthu

காதலில் தோற்றவங்களுக்குப் பல நேரங்களில் காதல் தோல்விப் பாடல்கள் மருந்தாக இருக்கும். பல நேரங்களில் சிக்கலாக இருக்கும். 80களில் டி.ராஜேந்தரின் பல படங்களில் காதல் தோல்வியால் இறந்தே போய்விடுவான். காதல் தோல்விக்கு மருந்து போடுகிற மாதிரி இன்னொரு காதல் இருக்குன்னு விஞ்ஞானப்பூர்வமாக அணுகிய சிறப்பான பாடல். முதலில் கமல் இந்தப் பாடலை மறுத்தாராம். அதன்பிறகு கவியரசர் வைரமுத்து சமாதானம் செய்து இந்தப் பாடலை எழுதினார் என பார்ப்போம்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தை இயக்கியவர் சரண். இசை பரத்வாஜ். கமல், பிரபு, சினேகா, பிரகாஷ்ராஜ் நடித்தது. மருத்துவம் என்பது வெறும் ஊசி மருந்து மட்டும் அல்ல. அதற்குள் மருத்துவரின் மனசும் இருக்கு என்பதை சொல்லும் படம். இதில் தான் கட்டிப்புடி வைத்தியம் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தினாங்க. காதல் தோல்வியால் துவண்ட ஒருவனுக்கு ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற பாடல்.

VR MBBS

VR MBBS

ஆழ்வார் பேட்டை ஆண்டவா வேட்டியைப் போட்டுத் தாண்டவா என்ற வரிகள் முதலில் எழுதப்பட்டது. இதைக் கமல் மறுத்துவிட்டாராம். அதன்பிறகு வைரமுத்து சமாதானம் செய்தாராம். பின்னர் இதைக் குழுவினர் பாடுவது போல் எழுதப்பட்டது. டிரம்பட், வயலின் என மியூசிக் போட்டுக் கலக்கியிருப்பார் பரத்வாஜ்.

காதல் போயின் சாதலா, இன்னொரு காதல் இல்லையா, தாவணி போனா சல்வார் உள்ளதடா, கட்சித்தாவல் இங்கே தர்மமடா என்று செம மாஸாக வரிகளைப் போட்டு இருப்பார் வைரமுத்து. இப்படியே பாடல் முழுவதும் ரசனையுடன் எழுதியிருப்பார். பாடலில் கமலின் டான்ஸ் களைகட்டும். அப்போது ரசிகர்களைக் கொண்டாட வைத்த பாடல் இது. அரசியலில் தான் கட்சித் தாவல் மோசம். ஆனால் காதலில் ஒரு காதலை இழந்ததும் இன்னொரு காதலுக்குத் தாவுவது தர்மம் என்கிறார் வைரமுத்து.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story