என்னது இந்த நடிகர்களுக்கெல்லாம் தமிழ் படிக்கவே தெரியாதா?... என்னப்பா சொல்றீங்க!
தமிழ் சினிமா நடிகர்கள் மீது சமீப காலமாக ஒரு காட்டமான விமர்சனம் இருக்கிறது. அதாவது “நடிகர்கள் தங்களுக்கு வரும் ஸ்கிரிப்ட்டை படிக்கிறார்களா இல்லையா?” என்பதுதான் அது.
சமீப காலமாக டாப் நடிகர்கள் நடித்த பல திரைப்படங்கள் அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. விஜய் நடித்த “பீஸ்ட்”, “வாரிசு” போன்ற படங்கள் அதிகளவில் நெகட்டிவாகவே விமர்சிக்கப்பட்டது. அதே போல் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படமும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து சொற்ப ஆண்டுகளே ஆகியிருந்தாலும் தனது கேரியரில் பெரும்பான்மையான வெற்றித் திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு கூட சமீபத்தில் வெளிவந்த “பிரின்ஸ்” திரைப்படம் படுதோல்வியடைந்தது.
தனது கேரியரின் தொடக்க காலத்தில் வேற லெவல் ஹிட் படங்களை கொடுத்தவர் “விக்ரம்”. ஆனால் விக்ரமிற்கு கடைசியாக “தெய்வத் திருமகன்” என்ற திரைப்படமே மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படமாக அமைந்தது. இந்த வரிசையில் தற்போது புதிதாக இடம்பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, சமீப காலமாக அவர் கதாநாயகனாக நடித்த எந்த திரைப்படங்களும் ஓடவில்லை. விஜய் சேதுபதியை தொடர்ந்து விஷால், ஆர்யா ஆகியோரும் இந்த லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெறுவார்கள். சமீப காலமாக விஷால், ஆர்யா ஆகியோர் நடித்த எந்த திரைப்படங்களும் ஒர்கவுட் ஆகவில்லை.
இது போன்ற போக்கை பார்க்கும்போது “இந்த நடிகர்கள் எல்லாம் கதை கேட்டுத்தான் நடிக்க ஒப்புக்கொள்கிறார்களா?” என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வலைப்பேச்சு அந்தணன் “இங்கு டாப் மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்கள் என்றால் கிட்டத்தட்ட 10 பேர் இருப்பார்கள். ஆனால் இவர்களை வைத்து படம் பண்ண வேண்டும் என முயற்சிப்பவர்கள் 1000 பேர்களுக்கு மேல் இருக்கிறார்கள். ஆதலால் நடிகர்களால் நேரடியாக கதை கேட்க முடியாது என்பதால் ஸ்கிரிப்ட் வாங்கிப் படிக்கிறார்கள்.
ஆனால் இன்றைக்கு இருக்கும் பல ஹீரோக்களுக்குத் தமிழ் படிக்கவே தெரியாது. அதே போல் ஸ்கிரிப்ட் எழுதும் பல இயக்குனர்களுக்கு தமிழை தவிர வேறு எதுவும் தெரியாது.
ஆதலால் நடிகர்கள் தங்களுக்கு கீழ் கதை கேட்பதற்கென்றே ஒரு தனி குழுவை வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்தை கொடுக்கவேண்டும். அந்த குழு, வரும் இயக்குனர்களிடம் நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதனை நடிகர்களிடம் கொடுக்கவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஹீரோ அந்த கதையை படிக்கலாம். ஆனால் எந்த நடிகர்களும் இதை செய்யமாட்டார்கள் என்பதுதான் துர்திஷ்டம்” என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: 90களிலேயே இன்டெர்நெட்டில் புகுந்து விளையாடி மிரள வைத்த பிரசாந்த்… அப்போவே அப்படி!!