இவர் மட்டும் இல்லைன்னா விக்னேஷ் சிவன் காணாமல் போயிருப்பார்-பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்…
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த புராஜக்ட்டில் இருந்து வெளியேறினார்.
கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக முடிக்காத காரணத்தால் விக்னேஷ் சிவன், “ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்திற்கு பிடிக்காத காரணத்தால்தான் விக்னேஷ் சிவன் விலகினார் என்றெல்லாம் கூட செய்திகள் வெளிவந்தன.
அதே போல் நயன்தாரா மூலமாகத்தான் அஜித் படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கிடைத்தது என்று சினிமா வட்டாரங்களில் பல செய்திகளில் வெளிவந்தன. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலத்தளத்தில் “வெற்றியோ தோல்வியோ கற்றுக்கொடுப்பதை விட, அவமானங்கள் நிறையவே கற்றுக்கொடுக்கிறது” என்று ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்த பதிவை குறித்த தனது கருத்தை கூறியுள்ளார்.
அதாவது “விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து வெளியேறியதை பெரிய அவமானமாக நினைக்கிறார் என்றால் என்னை பொறுத்தவரைக்கு அது ஒரு காமெடியாக தெரிகிறது, அல்லது ஒரு பப்ளிசிட்டிக்காக தன் மீது ஒரு அனுதாபம் வருவதற்காக அதனை பயன்படுத்துகிறார் என தெரிகிறது.
ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது ஏற்பட்ட கஷ்டத்தை விட இது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டம் கிடையாது. நயன்தாரா என்று ஒருவர் இல்லை என்றால், இன்று விக்னேஷ் சிவனை நாம் தேடுகிற அளவுக்குத்தான் இருந்திருப்பார். நயன்தாரா என்றொரு பிராண்டு இருக்கும்போது இவர் அப்படி என்ன கஷ்டப்பட்டுவிட்டார், அப்படி என்ன நடந்துவிட்டது” என்று கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர், “விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 வாய்ப்பு நயன்தாரா மூலமாக எதுவும் கஷ்டப்படாமல்தான் கிடைத்தது. ஆனால் அதை கூட அசிரத்தையுடன் நடந்துகொண்டதால் அந்த புராஜெக்ட்டில் இருந்து வெளியே வர நேர்ந்தது. ஆதலால் தவறு விக்னேஷ் சிவனுடையதுதான்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் டிவி விளம்பரத்தில் நடிச்சிருக்காரா? அதுவும் எந்த பிராண்ட் தெரியுமா?