தொப்பைக்கே தனி லக்கேஜ்!.. அஜித்தை கிண்டலடித்த பிரபலம்!.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். விஜயின் சக போட்டியாளராக கருதப்படுபவர். விஜயின் வாரிசு படம் வெளியான போது துணிச்சலாக தனது துணிவு படத்தையும் ரிலீஸ் செய்து கெத்து காட்டியவர். துணிவு படம் வெற்றி பெற்று நல்ல வசூலையும் பெற்றது.
அதன்பின் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் சிவன் இயக்குவதாக செய்திகள் வெளியாகி பின் அவர் தூக்கப்பட்டு அவருக்கு பதில் மகிழ் திருமேனி இயக்குனர் என அறிவிக்கப்பட்டார். மேலும், படத்தின் தலைப்பு ‘விடாமுயற்சி’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. ஒருபக்கம், அஜித் பைக்கை எடுத்துகொண்டு சுற்றுப்பயனம் செய்ய கிளம்பிவிட்டார்.
அஜித் ரசிகர்கள் ஒருபக்கம் சோர்வடைந்தனர். வலிமை படத்திற்கு அப்டேட் கேட்டு கதறிய அவர்கள் விடாமுயற்சியை கண்டுகொள்ளவே இல்லை. இது அஜித்துக்கும் வசதியாக போனது. ஆகஸ்டு மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என் செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால் உண்மையா என்பது அஜித்துக்கு வெளிச்சம்.
இதையும் படிங்க: உனக்கு என்ன அஜித் கவலை!. சினிமா வாழணுமா சாகணுமா?!.. பொங்கிய பிரபலம்..
ஒருபக்கம், விடமுயற்சி படத்துக்காக அஜித் உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்து வருவதாகவும், குறிப்பாக தொப்பையை கரைத்து சிக்கென மாறிவிட்டார் எனவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. சமீபத்தில் விமான நிலையத்தில் அஜித் நடந்து வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இதை கிண்டலடிக்கும் விதமாக சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அஜித்துக்கு நெருக்கமான ஒருத்தர் ‘சார் இப்ப வொர்கவுட்லாம் பண்ணி ஸ்லிம் ஆயிட்டாரு’ன்னு சொன்னார். ஏர்போர்ட்ல அஜித்தை பார்த்தா தொப்பைக்கே தனி லக்கேஜ் போட்ருப்பார் போல!. யோவ். சோர்ஸ்.. என்னய்யா இப்படி பண்ணிட்டே’ என பதிவிட்டிருந்தார்.
இது அஜித் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்த அந்தனனை அசிங்க அசிங்கமாக திட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேப்டனுக்கு பிறகு அஜித்தை கொண்டாடப்போகும் மதுரை மக்கள் – என்ன விஷயம் தெரியுமா?