வேறு வழியில்லாம வச்சிருக்காங்க.. யோகிபாபுவின் காமெடியை கலாய்த்த அந்தணன்

by Rohini |   ( Updated:2025-05-06 05:14:28  )
yogibabu
X

yogibabu

Yogibabu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் இப்போது தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் நடிகர் யோகிபாபு. ஆரம்பத்தில் வில்லன் குரூப்களில் ஒருவராக துணை நடிகராகத்தான் நடித்து வந்தார் யோகிபாபு. அதன் பிறகு திடீரென காமெடியனாக அவதரித்து தொடர்ந்து பல படங்களில் அவர்தான் இப்போது காமெடி நடிகராக நடித்துவருகிறார். பெரிய பெரிய நடிகர்கள் மட்டுமில்லாமல் சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் எந்த படத்தையும் விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் யோகிபாபுவை பற்றிய ஒரு சர்ச்சை கிளம்பியது. ஒரு பட விழாவிற்கு யோகிபாபு கலந்து கொள்ள 7 லட்சம் கேட்டதாகவும் அதை அதே மேடையில் தயாரிப்பாளர் சொல்லி மிகவும் வேதனையுடன் பேசியிருந்தார். ப்ரோமோஷனுக்கு வர 7 லட்சம் கேட்கும் யோகிபாபு என பல பத்திரிக்கைகளில் யோகிபாபுவை பற்றி எழுதினார்கள். இந்த நிலையில் இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

முதன் முதலில் ப்ரோமோஷனுக்கு வர மாட்டேன் என சொன்னவர் அஜித்தான். ஆனால் வந்துதான் படத்தை ப்ரோமோட் செய்யவேண்டும் என அவசியமில்லை. அவர் படத்தில் நடிக்கிறார் என்றாலே படத்தை பார்க்க ரசிகர்கள் ஓடி வருவார்கள். அவருக்கு பிறகு நயன்தாரா அந்த ஒரு விஷயத்தை ஃபாலோ செய்ய ஆரம்பித்தார். அவருக்கும் ரசிகர்கள் பல பேர் இருக்கிறார்கள். அதனால் அவரும் ப்ரோமோஷனுக்கு வரவேண்டும் என அவசியமில்லை.

இவர்களை தொடர்ந்து ஹன்சிகாவும் அப்படித்தான் இருந்தார். ஆனால் அவரை வரவழைக்க ஸ்டார் ஹோட்டலில் அறை, ஃபிளைட்டு டிக்கெட், இது போக அவருக்கு என தனியாக சம்பளம் என கொடுக்க ஹன்சிகா வந்தார். ஆக ப்ரோமோஷனில் இவ்வளவு இருக்கிறதா என பார்த்தார் யோகிபாபு. நாமும் இப்படியே ஃபாலோ செய்வோம் என செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் வடிவேலு காமெடிக்கு என தனியாக ஒரு சேனல் ஓடுகிறது.

விவேக் காமெடிக்கு என ஒரு தனி சேனல் ஓடுகிறது. எங்கேயாவது யோகிபாபுவின் காமெடியை மட்டும் போட்டு சேனல் இருக்கிறதா? அவர் காமெடியை பார்த்து ரசிக்கிறவர்கள் அப்படி யாரும் இல்லை. இப்போது வடிவேலு, விவேக், சந்தானம் என ஹீரோவாக போய்விட்டதால் யாரையாவது காமெடிக்கு போட வேண்டுமே என எண்ணித்தான் யோகிபாபுவை போட்டார்கள்.

#image_title

ஆனால் தன்னை ஒரு சந்தானம் என்றோ, வடிவேலு என்றோ நினைத்துக் கொண்டு இருக்கிறார் யோகிபாபு என அந்தணன் கூறினார். ஆனால் இப்போது மீண்டும் சந்தானம் காமெடி டிராக்கிற்கு மாறிவிட்டதால் ஒரு வேளை பழைய மாதிரி சந்தானத்தின் காமெடி வொர்க் அவுட் ஆகிவிட்டால் யோகிபாபுவின் நிலைமை என்னவாகும் என தெரியவில்லை.

Next Story