என்னது ரஜினி மந்திரவாதியா? ஜப்பான், சீனாவில் அவர் படம் ஓடுவதற்கு இதுதான் காரணமா?

rajini 2
மற்ற எல்லா நாடுகளை விட சீனாவில் திரையரங்குகள் அதிகம். அதனால் ஏதாவது ஒரு தமிழ் படம் அங்கு வெளியானால் வசூல் விவரங்கள் பெரிய அளவில் நம்மை ஆச்சரியப்படுத்தும்.அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மகாராஜா படம் சீனாவில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே தமிழில் 100 கோடிக்கும் மேல் வசூல் பெற்று ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படமாக மாறியது.
இதற்கிடையில் சீனாவிலும் வெளியானது. இதற்கு முன் ரஜினியின் 2.0 படம் சீனாவில் வெளியிடப்பட்டு அங்கு பெரும் தொகை வசூலில் அள்ளியது. அதற்கடுத்தபடியாக மகாராஜா படமும் வெளியாகி 2.0 படத்தின் வசூலை தாண்டியிருப்பதாக தகவல் வெளியானது. 2.0 படம் வெற்றிப்பெற்றது என்றால் அது ரஜினி படம். அதனால் அவருக்கு உண்டான மாஸ், கிரேஷ் இதெல்லாம் சேர்த்துதான் அந்தப் படத்தை வெற்றிக்கு தள்ளியிருக்கும்.
இதையும் படிங்க: கமலோட அந்த படத்தை 60 நாட்கள் தொடர்ந்து நைட் ஷோ பார்த்த இயக்குனர்!.. அட அவரா?!.
ஆனால் விஜய்சேதுபதியை யார் என்றே சீனா மக்களுக்கு தெரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் 2.0 படத்தின் வசூலை எப்படி மகாராஜா படம் தாண்டியிருக்கும் என அனைவரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ரஜினியின் படம் சீனா மற்றும் ஜப்பானில் பெரிய அளவில் ஓடுவதற்கு காரணமான விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

maharaja
சீனா, ஜப்பான் மக்கள் ரஜினியை இந்தியாவில் இருக்கும் ஒரு பெரிய மந்திரவாதி என்று நினைத்துதான் அவருடைய படத்தை பார்த்திருப்பார்கள். ஏனெனில் அவர் திரும்புனால் 100 பேரு விழுறான். தொட்டா 10 பேர் போய் விழுறான். கையை நீட்டியதும் ரோஜாப் பூ வந்து விடுகிறது. இதெல்லாவற்றையும் பார்த்து ஒரு வேளை பெரிய மந்திரவாதியா இருப்பாரோ என்றுதான் நினைத்து படத்தை பார்த்திருப்பார்கள்.
இதையும் படிங்க: ஐய்யயோ இவர் ஹீரோவா? பின்னாளில் 80 படம் 40 ஹீரோயின்களுடன் நடித்த அந்த ஹீரோ
ஆனால் மகாராஜா படம் அப்படியில்லை. அதில் இருக்கும் கண்டெண்ட்தான் இந்தளவுக்கு வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது. மகாராஜா படம் தமிழில்தான் ரிலீஸாகியிருக்கிறது. ஆனால் சப் டைட்டில் சீனா மொழியில் போடப்பட்ட ரிலீஸ் செய்தார்களாம். தமிழ் பெருமை சீனா வரை பரவியிருப்பதாக அந்தணன் கூறினார்.