More
Categories: Cinema News latest news

‘எஜமான் காலடி மண்ணெடுத்து’னு பாடுனா மட்டும் போதுமா? இறங்கி செஞ்சாருல விஜய்.. ஆவேசத்தில் அந்தணன்

Actor  Vijay: விஜய் தற்போது பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் வலை பேச்சு அந்தணன் இது குறித்து அவருடைய கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதில் அவருக்கு என்ன ஆதங்கம் என்றால் எந்த ஒரு தனி அரசியல் கட்சியும் செய்ய முன்வராத செயலை விஜய் தானாக முன்வந்து இரண்டு வருடங்களாக செய்து வருகிறார்.

அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள்?அவரை விமர்சிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது .அதை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் அவரை விமர்சிப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். மேலும் காலம் காலமாக சினிமாவில் ஒரு பெரிய வசதியோடு இருக்கும் நடிகர் நடிகைகள் படங்களில் அதே மாதிரியான ஒரு பிம்பத்தில் காட்டும் போது இல்லாத ஏழை எளியவர்களுக்கு போட்டிகோவில் இருந்து இலவச துணிமணிகளை வழங்குவது போன்ற காட்சிகளை தான் படமாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: இவங்களானு நினைக்கும் போது நம்பவே முடியல! காசே வாங்காமல் நடித்துக் கொடுத்த நடிகர்களின் பட்டியல்

அதில் கூட இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் மாதிரியான ஒரு காட்சியை எந்த படத்திலாவது வைத்திருப்பார்களா? எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம் என்றுதானே மடத்தனமா பாட்டை எழுதினாங்க. எஜமான் நடந்து போகும்போது அவருடைய கால் தடத்தை மட்டும் விட்டுவிட்டு ஓரங்களில் நடந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு அவர் மேல் உள்ள மரியாதை என சொல்கிறார்கள்.

இதிலிருந்து இந்த சமூகத்தை அப்படியே ஒரே நிலையில் வைத்து தான் பார்க்க வேண்டும் என அரசியல்வாதிகளும் சரி ஒரு சில நடிகர் நடிகைகளும் சரி. அதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் இங்கிருந்து வந்த ஒரு நடிகர் தான் விஜய். இன்று 234 தொகுதிகளில் இருக்கும் மாணவ மாணவியர்களை அழைத்து அவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக இந்த கல்வி உதவிகளை வழங்கி வருகிறார்.

இதற்கு பின்னணியில் அரசியல் இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஓட்டுக்காக தான் செய்கிறார் என்றால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஓட்டுக்காகவே இருக்கட்டும். ஆனால் அதில் பயன் அடைபவர்கள் யார் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். மாணவர் மாணவியர்கள் தான் பயனடைகிறார்கள். அவர்களுக்கும் இது ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.

இதையும் படிங்க: மாணவர்களிடம் விஜய் கேட்ட கேள்வி… பலத்த கோஷத்துடன் அவர்கள் சொன்ன பதில்

இதே போல் வேறு எந்த ஒரு தனி அரசியல் கட்சியாவது இந்த மாதிரி செயலை செய்து இருக்கிறார்களா? அரசு செய்கிறது. ஏனெனில் அது அரசின் கடமை. சலுகை கொடுக்கிறது. கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் தலா 1000 ரூபாய் என்ற வீதத்தில் ஊக்கத்தொகையும் கொடுத்து வருகிறது அரசு. ஏனெனில் அது அரசு பணம்.

ஆனால் தனி அரசியல் கட்சியிலிருந்து யாராவது செய்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் செய்யுறவரை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்பது தான் என்னுடைய கேள்வி. இன்று பல ஊடகங்களில் விஜயின் இந்த கல்வி உதவியை பற்றி பலவாறு விமர்சித்து வருகிறார்கள். அது சரியில்லை இது சரியில்லை என நொட்டு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தல.. விஜய் ஸ்கோர் பண்றார்!. போட்டோவ இறக்கி விடுங்க!.. அஜித்தை பங்கம் பண்ணும் பிரபலம்…

அதற்குப் பின்னணியில் அவர்கள் படும் கஷ்டத்தையும் பார்க்க வேண்டும். 234 தொகுதிகளில் தலா மூன்று பேர் என்ற வீதத்தில் கூடவே அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் வந்து தங்குவதற்கு, சாப்பிடுவதற்கு, போக்குவரத்து செலவு என எல்லாவற்றையும் ஒரே ஆளாக இருந்து பார்க்கிறார் விஜய். அது ஏன் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை ?மறுபடியும் சொல்கிறேன் அவரை விமர்சிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இதைப் பற்றி விமர்சிக்காதீர்கள் என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

Published by
Rohini

Recent Posts