பொன்னியின் செல்வன் விவகாரம்.. சிண்டு முடிஞ்சு விடும் சிம்பு.. சொன்னதே அவர் தானாம்…
கடந்த 2019 ஆம் ஆண்டு மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. அதன் பின் அத்திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கின. இதில் கார்த்தி, ஜெயம் ரவி, சீயான் விக்ரம் ஆகிய பலரும் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளிவந்தது.
இதனை தொடர்ந்து சிம்பு இத்திரைப்படத்தில் நடிக்க இருந்ததாகவும், ஆனால் சிம்பு இத்திரைப்படத்தில் நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என விக்ரமும், ஜெயம் ரவியும் கூறியதாகவும் “வலைப்பேச்சு” என்ற யூட்யூப் சேன்னல் மூலம் இணையத்தில் வைரல் ஆக பரவி வந்தது. இந்த செய்தி அப்போது மிகப்பெரிய பேச்சுப்பொருளாகவும் ஆகியது.
இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, மணிரத்னம், த்ரிஷா, பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ஜெயம் ரவியிடம் “சிம்பு இந்த படத்தில் நடித்தால், நீங்களும் விக்ரமும் நடிக்க மாட்டோம் என்று சொன்னதாக ஒரு வலைத்தளத்தில் கூறினார்கள். அது உண்மையா?” என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி “இந்த செய்தி பரவிய போதே சிம்பு எனக்கு தொடர்பு கொண்டு யூட்யூப்பில் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். நீங்கள் அவர்களை எல்லாம் கண்டுக்காதீர்கள். நான் இந்த படத்தில் நடித்தால் முதலில் சந்தோஷப்படப் போவது நீங்கள் தான்” என சிம்பு தன்னிடம் சொன்னதாக கூறினார்.
இந்த நிலையில் ஒரு அதிர்ச்சித்தக்க செய்தியை தனது “வலைப்பேச்சு” வலைத்தளத்தில் பத்திரிக்கையாளர் அந்தனன் பகிர்ந்துள்ளார். அதாவது சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிம்பு விவகாரம் குறித்து ஜெயம் ரவியின் பதிலை குறிப்பிட்ட அந்தனன், “தான் நடித்தால் ஜெயம் ரவி அந்த படத்தில் நடிக்கமாட்டேன் என்று சொன்னதாக என்னிடம் கூறியதே சிம்பு தான்” என்று கூறியுள்ளார்.
அந்தனன் பல காலமாக சிம்புவின் தந்தையான டி ராஜேந்தருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் சிம்புவே தன்னிடம் ஜெயம் ரவி குறித்து இப்படி கூறியதாக அந்தனன் வெளிப்படுத்தியுள்ளது இணையத்தில் பரபரப்பாக வைரல் ஆகி வருகிறது. ஆனால் சிம்பு அந்த படத்தில் நடிப்பதாக இருந்ததா? அதனை ஜெயம் ரவி எதிர்த்தாரா? இல்லை அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லையா? என்பதெல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.