எல்லாம் சூரி கால்ஷீட்டுக்காக!…கொட்டுக்காளி பாராட்டும் இயக்குனர்களை வெளுக்கும் பிரபலம்!..

Published on: August 21, 2024
kottukkaali
---Advertisement---

kottukkaali : ஜால்ரா அடிப்பது சினிமா துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட நடிகரால் கிடைக்கும் ஆதாயம்தான். தயாரிப்பாளருக்கு ஜால்ரா அடித்தால் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு ஹீரோவை தொடர்ந்து புகழ்ந்து பேசி ஜால்ரா அடித்தால் அவர் கால்ஷீட் கொடுப்பார்.

இது பல வருடங்களாக பலரும் செய்து வருகிறார்கள். சில இயக்குனர்கள் ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்குவதே இப்படித்தான். அதற்கு காரணம் என்னவெனில் இங்கு மார்க்கெட் உள்ள நடிகர்கள் குறைவு. அந்த வரிசையில் கொட்டுக்காளி பட விழாவில் மிஷ்கின், வெற்றிமாறன் என எல்லோரும் சூரியை பாராட்டி பேசியது பற்றி வலைப்பேசு அந்தணன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

இதையும் படிங்க: இந்த மொக்க படத்துக்கு இவ்வளவு பில்டப்பா?!.. கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனம்!….

கோடம்பக்கத்தில் 1500 உதவி இயக்குனர்கள் வாய்ப்பு தேடி வருகிறார்கள். இதுபோக ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இருக்கிறார்கள். எல்லா நடிகர்களும் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. அதனால்தான், ஒரு நடிகரை புகழ்ந்து பேசுவதையும், ஜால்ரா அடிப்பதையும் பலரும் செய்து வருகிறார்கள்.

கொடுக்காளி படத்தில் ஒன்றுமே இல்லை. ஒரு தெளிவான கதையோ முடிவோ இல்லை. இதே இயக்குனார் வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படம் நன்றாக இருந்தது. அதில் ஒரு சதவீதம் கூட கொட்டுக்காளியில் இல்லை. ஒரு சில காட்சிகள் மட்டுமே நன்றாக இருக்கிறது. சூரிக்கே வியாபாரரீதியாக பின்னடைவை சந்திக்கும் படம் இது.

kottukkaali

ஆனால், மேடையில் அப்படி இப்படி என பாராட்டுகிறார்கள். இதெல்லாம் எதற்காகவெனில் சூரியில் கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே காரணம்தான். சூரி ஒன்னுக்கு அடிப்பது போல் நடிப்பதை அப்படி பாராட்டி பேசுகிறார் மிஷ்கின். அப்படி எதில் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. மிஷ்கின் இதை விளக்க வேண்டும். சூரியை விட அவரின் அக்காவாக வரும் 2 பெண்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களைத்தான் எல்லோரும் பாராட்டி இருக்க வேண்டும்’ என் சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே கொட்டுக்காளி ஒரு குப்பை படம். அதில் ஒன்றுமே இல்லை. இந்த படத்தின் கதை மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதும் புரியவில்லை. இந்த படம் ஓடாது என பயில்வான் ரங்கநாதன் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதுதான் ஹிஸ்ட்ரி! தொடர்ந்து சாதனை படைத்து வரும் மகாராஜா.. என்ன மேட்டர் தெரியுமா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.