80ஸ் ஹீரோக்கள் மக்கள் நாயகன் ராமராஜனும், மைக் மோகனும் கம்பேக் கொடுத்துள்ளார்கள். ஒண்ணு சாமானியன். அடுத்தது ஹரா. இதுபற்றி பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
எப்பவுமே அவங்களுக்கு வயசாயிடுச்சுன்னு உணர மாட்டாங்கறாங்க. வருஷங்கள் ஓடிக்கிட்டு இருக்குன்னு உணர மாட்டேங்கறாங்க. அன்னைக்கு டாப்ல இருக்கும்போது எப்படி இருந்தோம்மா அதே மாதிரி இன்னைக்கும் நடக்கும்னு அவங்க நினைக்கிறாங்க.
அன்னைக்கு மாதிரி பூவைக் கையில எடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தா இன்னைக்கு எடுபடாது. வயசு ஒண்ணு இருக்கு.
தோற்றம் மாறிடுச்சு. தாடி எல்லாம் வச்சிக்கிட்டு மோகன் வேற மாதிரி இருக்காரு. கோட் படத்துல வில்லனா நடிக்காரு. ஆனா ஹரா எடுபடுமான்னு தெரியாதுன்னு அப்பவே சொல்லிவிட்டார் வலைப்பேச்சு அந்தனன்.
இதையும் படிங்க… பிரேம்ஜி காதலில் நடந்த பிரச்சினை! ரகசிய திருமணத்திற்கு இதுதான் காரணமா? பிரபலம் சொன்ன தகவல்
அப்போது அவர் மக்கள் நாயகன் ராமராஜன் பற்றி மேலும் தெரிவித்தது இதுதான்…
ராமராஜனும், மைக்மோகனும் துப்பாக்கியுடன் திரையில் தோன்றுகின்றனர். அது தப்பு இல்ல. இன்னைக்கு எல்லா ஹீரோக்களுமே அப்படித்தான் வர்றாங்க. ஆனா இன்னைக்கு உள்ள ட்ரெண்ட் மாறிடுச்சு.
மக்கள் நாயகன் ராமராஜன் இந்தக் கதைக்காகவே இவ்வளவு நாள் நான் நடிக்காம இருந்தேன்னு சொல்லி நடிச்சிருக்காரு. ஆனா அது வந்து எடுபடல. இன்னும் கொஞ்சம் சரியான கதையை அவர் தேர்ந்தெடுத்து இருக்கலாம். அவருடைய ரசிகர்கள் எல்லாரும் வந்துருந்தா கூட நல்லா ஓடியிருக்கும்.
ஆனா இது சரியான கதை இல்லை. சினிமாவுல நடிச்சா ஹீரோவாத் தான் நடிப்பேன்னு சொன்னாரு. அது தப்பு இல்ல. இன்னொன்னு இன்னைக்கும் அவரோட ரசிகர் மன்றங்களை உயிர்ப்போடு வச்சிருக்காரு.
சினிமாவுக்காக கொஞ்சமாவது உடலைக் கொஞ்சம் பிட்டா மாத்திருக்கலாம். வெயிட் எல்லாம் குறைச்சி நடிச்சிருந்தா நல்லா இருந்துருக்கும். அதையும் அவர் செய்யல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… மோகனை கெட்ட வார்த்தைகளில் கண்டபடி திட்டிய பாலசந்தர்… அட அந்தப் படத்துக்கா…. அப்படின்னா தேவை தான்..!
ஆனா இவரு சொல்றபடி தான் இப்போ நடந்துருக்கு. பெரிய அளவில் இருவரது படங்களுக்கும் வரவேற்பு இல்லை. அடுத்து ‘கோட்’ படத்தில் மைக் மோகன் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…