லோகேஷ் பற்றி எஸ்.ஏ.சி சொன்னது உண்மையா?!.. இதுதான் நடந்திருக்கும்!.. பிரபலம் பேட்டி!...

by சிவா |
sac
X

Lokesh kanagaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அதிக எதிர்பார்ப்புகளுக்கு உடையே வெளியான திரைப்படம்தான் லியோ. இந்த படம் உருவாகி கொண்டிருந்த போது சமூகவலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் லியோ புராணமாகவே இருந்தது. சினிமா செய்தியாளர் பலரும் யுடியூப்பில் இந்த படம் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

படம் வெளியான பின் முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதி நன்றாக இல்லை என்றே பலரும் சொன்னார்கள். இரண்டாம் பாதி திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. கிளைமேக்ஸ் காட்சியும் நன்றாக இல்லை. முக்கியமாக, லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் செய்யும் மேஜிக் லியோவில் இல்லை என்றே பலரும் கூறினார்கள். அதேபோல், இந்த படத்தில் வரும் நரபலி தொடர்பான காட்சிகளையும் யாரும் ரசிக்கவில்லை.

இதையும் படிங்க: அரசியலுக்கு வந்தா 1600 கோடி வேணும்!. விஜய்க்கு பின்னால் இருப்பது யார்?!.. பரபர தகவல்..

இந்நிலையில்தான், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி ‘இப்போதுள்ள இயக்குனர்களுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் இல்லை. நான் ஒரு படம் பார்த்தேன். இயக்குனரை போனில் அழைத்து ‘முதல் பாதி நன்றாக இருக்கிறது என சில காட்சிகளை சொன்னேன். இரண்டாம் பாதியில் நீ சொல்லி இருப்பது போல நரபலி காட்சிகள் அந்த மதத்தில் இல்லை என நான் சொன்னபோது ‘சார் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்’ என சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார்.

படம் வெளியாக 5 நாட்கள் இருந்தது. நான் சொன்ன கருத்தை ஏற்று அந்த காட்சிகளை மாற்றி இருக்கலாம். ஆனால், அவர் அதை செய்யவில்லை. படம் வெளியானபின் எல்லோரும் அதையே சொன்னார்கள்’ என பேசி இருந்தார். அவர் லோகேஷ் கனகராஜைத்தான் சொல்கிறார் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டனர். ஊடகங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: எனக்கும் அஜித்துக்கும் சண்டை! நேரா வீட்டுக்கே வந்துட்டாரு.. சரத்குமார் வீட்டில் நடந்த அந்த சம்பவம்

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இதுகுறித்து பதில் சொன்ன வலைப்பேச்சு பிஸ்மி ‘எஸ்.ஏ.சி பேசியதற்கு லோகேஷ் அப்படி ரியாக்ட் செய்திருப்பாரா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஏனெனில் அவரை நானே பேட்டி எடுத்திருக்கிறேன். மற்ற இயக்குனர்களை ஒப்பிட்டால் அவர் மிகவும் பண்பானவர். விமர்சனங்களை ஏற்றுக்கொள்வார். அவரிடம் எஸ்.ஏ.சி விஜயின் அப்பாவாக பேசினாரா? இல்லை சீனியர் இயக்குனராக பேசினாரா? என்பது தெரியவில்லை.

அவர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். அதில் அதிக நம்பிக்கை கொண்டவர். எனவே, ‘என் மகனை வைத்து இப்படி ஒரு குப்பை படத்தை கொடுத்திருக்கிறாயே’ என கோபமாக பேசியிருப்பார். அதுபிடிக்காமல் லோகேஷ் அப்படி சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்’ என பிஸ்மி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறன் உடம்புக்குள்ள புகுந்த விஜய் அப்பாவோட ஆவி!.. அடேய் எல்லை மீறி போறிங்கடா!..

Next Story