தலக்கணம் ஏறிப் போய் அலையும் நயன்தாரா! திடீரென ஏன் இவருக்கு இவ்வளவு கோபம்?

Published on: November 28, 2024
nayanthara
---Advertisement---

தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அவர் நடித்த முதல் திரைப்படம் ஆன மலையாளத்தில் வெளிவந்த மனசினக்கர திரைப்படம் தான் அவர் முதன்முதலில் நடித்த திரைப்படம். அங்கிருந்து தான் தனது திரைப்பட துறையின் பயணத்தை ஆரம்பித்தார் நயன்தாரா.  தன்னுடைய நடிப்பாலும் தனக்கே உரிய தனித்துவமான ஸ்டைலாலும்  தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.

அந்தத் திரைப்படம் தான் சந்திரமுகி திரைப்படம். யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம் அவரது வாழ்க்கையில் நடந்தது என்றால் அது சந்திரமுகி திரைப்படத்தின் மூலம் தான். அவரே நினைத்திருக்க மாட்டார் தனது இரண்டாவது படத்தில் ரஜினிக்கு ஜோடியாவேன் என்று. அந்த படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையும் படிங்க: ‘சந்திரமுகி’யோடு மோதிய ஆர்யா படம்.. ரிசல்டை நினைச்சு விஷ்ணுவர்தன் செய்த காரியம்

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியாக ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் நயன்தாரா. தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும் நடிப்பில் தனக்கே உரிய ஸ்டைலை பயன்படுத்தி அனைவரையும் கவர்ந்ததால் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கொடுத்து அசத்தியது.

அதற்கு ஏற்ப நயன்தாராவின் கிராப்பும் உயர்ந்து கொண்டே சென்றது. தமிழ் மட்டுமல்ல கன்னடம் மலையாளம் தெலுங்கு என அடுத்தடுத்த மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்து வந்தார். இறுதியாக பாலிவுட்டிலும் இவருடைய பயணம் ஆரம்பித்தது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார் நயன்தாரா .

இந்த நிலையில் நயன்தாராவை பற்றியும் அவருக்கு கொடுக்கப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றியும் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் கூறும்போது  ‘நயன்தாராவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்ததில் இருந்து அவருடைய தலக்கணம் ஏறியது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அவர் வானத்தில் மிதக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இதையும் படிங்க: ‘சந்திரமுகி’யோடு மோதிய ஆர்யா படம்.. ரிசல்டை நினைச்சு விஷ்ணுவர்தன் செய்த காரியம்

அதுவரை தரையில தான் நடந்து கொண்டிருந்தார். அதை நாமே கண்கூடாக பார்த்திருக்கிறோம். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் மக்கள் யாரும் அவருக்கு கொடுக்கல .தனக்குத்தானே அவர் கொடுத்துக் கொண்ட பட்டம் தான் அது. அதையும் பத்திரிகை மீடியாக்களும் இணையக்கூலிப்படைகளும் சேர்ந்து பில்டப் செய்து இந்த பட்டத்தை மேலும் பெருமை படுத்தி பேச ஆரம்பிச்சாட்டாங்க. இதற்கிடையில் அவர் இந்தளவு உயரத்தை அடைந்ததற்கு காரணமான தயாரிப்பாளர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை ’ என வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.