
Cinema News
குஷ்புவை பற்றிச் சொன்னது தவறான தகவலா? மூத்த பத்திரிக்கையாளர் விளக்கம்… இப்படி அவசரப்பட்டுட்டீங்களேப்பா!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு வலைப்பேச்சு யூட்யூப் சேன்னலில், பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, நடிகை குஷ்புவின் சிபாரிசால்தான் சுந்தர்.சிக்கு “அருணாச்சலம்” திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று ஒரு தகவலை கூறியிருந்தார்.

Valai Pechu Bismi
பிஸ்மி, இத்தகவலை கூறியவுடன் இணையத்தில் ஒரு வீடியோ வலம் வந்தது. அதாவது சுந்தர்.சிக்கும் குஷ்புவுக்கும் கடந்த 2000 ஆம் ஆண்டுதான் திருமணம் நடந்துள்ளது. ஆனால் “அருணாச்சலம்” திரைப்படம் 1997 ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டதே, அப்படி இருக்க எப்படி குஷ்புவின் மூலம் சுந்தர்.சிக்கு அத்திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என அதில் பல தகவல்களை குறிப்பிட்டு பிஸ்மி சொன்னது பொய் என்று அவர் பேசியது ட்ரோல் செய்யப்பட்டிருந்தது.

Khushbu and Sundar.C
இந்த நிலையில் இன்றைய வலைப்பேச்சு வீடியோவில் இதற்கான விளக்கத்தை மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி அளித்துள்ளார். அதாவது சுந்தர்.சி இயக்கிய முதல் திரைப்படமான “முறை மாமன்” திரைப்படத்திலேயே குஷ்புவுக்கும் சுந்தர்.சிக்கும் காதல் மலர்ந்துவிட்டதாம். அதன் பிறகு இருவரும் நீண்ட காலம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தார்களாம். இந்த இடைப்பட்ட காலத்தில் குஷ்பு, சுந்தர்.சிக்காக பல சிபாரிசுகளை செய்தாராம்.
இதையும் படிங்க: யாராலும் செய்ய முடியாத அசாத்திய செயலை அசால்ட்டாக செய்து காட்டிய நாகேஷ்… வேற லெவல் !!

Khushbu and Sundar.C
“அருணாச்சலம்” திரைப்படம் மட்டுமின்றி, கமல்ஹாசனின் “அன்பே சிவம்” திரைப்படம் கூட குஷ்புவின் சிபாரிசில்தான் சுந்தர்.சிக்கு கிடைத்ததாம். கல்யாண தேதியை மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த தகவலை பார்க்கூடாது என பிஸ்மி அந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.