Categories: latest news

கங்குவா படம் முழுக்க ஏன் கத்துறாங்க தெரியுமா?!… இதுதான் விஷயமா?… புட்டு புட்டு வச்ச பிரபலம்!..

கங்குவா படம் முழுக்க எதற்காக கத்துகிறார்கள் என்கின்ற காரணத்தை சினிமா விமர்சகர் பிஸ்மி பகிர்ந்து இருக்கின்றார்.

நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்ச அளவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. பீரியட் படமாக இயக்குனர் சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கி இருக்கின்றார். மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: என்னை அடிக்கக் கூடிய தகுதி இந்த நடிகைக்குத்தான் இருக்கு.. ரஜினி சொன்ன அந்த நடிகை யார்?

சூர்யாவுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலங்களான திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், போஸ் வெங்கட். நட்டி நடராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நடிகர் சூர்யா இரண்டு ஆண்டுகள் மெனக்கெட்டு இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் காலை முதலே ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. கடந்த ஒரு மாதங்களாக படக்குழுவினர் படம் குறித்து ப்ரோமோஷன் செய்து மிகப் பெரிய பில்டப்பை கொடுத்து வைத்திருந்தார்கள். அது அனைத்தும் இன்று ஒரு நாளில் தரைமட்டமாகிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

kanguva

கங்குவா திரைப்படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தி பேசியிருந்தார்கள். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியது மட்டும்தான் மிச்சம். அதிலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு படி மேலே சென்று 2000 கோடி வசூல் என்றெல்லாம் பேசியிருந்தது தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. சினிமா விமர்சகர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை இப்படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு சென்ற பலரும் திரும்ப வரும் போது காது வலிக்கிறது என்று கூறி வருவதாக கிண்டலடித்து வருகிறார்கள். காரணம் தேவி ஸ்ரீ பிரசாந்த் போட்டிருந்த பிஜிஎம் மற்றும் இசைதான். காது கிழியும் அளவிற்கு படத்தின் பின்னணி இசையும், சவுண்ட் எபெக்ட்டும் இரைச்சலை கொடுத்திருந்ததாக கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: Kanguva: லக்கி பாஸ்கர் டீம்கிட்ட ஞானவேல் ராஜா கத்துக்கணும்!.. கொஞ்சமா பேசினாரு!…

இந்நிலையில் பிரபல விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி ‘இந்த திரைப்படத்தில் எதற்கு இவ்வளவு சவுண்ட் எபெக்ட் இருக்கின்றது. படம் முழுக்க ஏன் கத்துகிறார்கள் என்பதற்கான காரணத்தை விளக்கி இருக்கின்றார். அதாவது சத்தம் குறைவாக இருந்து அவர்கள் பேசுவது நமக்கு புரிந்து விட்டால் கதை தெரிந்துவிடும் அல்லவா? அதற்காகத்தான் இவ்வளவு சத்தத்தை கொடுத்து நமக்கு அவர்கள் பேசுவது எதுவும் புரியக்கூடாது என்பதற்காக இப்படி செய்திருக்கிறார்கள்’ என்று கிண்டல் அடித்திருக்கின்றார்.

ramya suresh

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago