பழசெல்லாம் மறந்து போச்சா!.. சிவகார்த்திகேயன் நன்றி கெட்டவர்!. விளாசும் பிரபலம்!…

Published on: August 15, 2024
sivakarthikeyan
---Advertisement---

Sivakarthikeyan: கொட்டுக்காளி பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ‘என்னால்தான் இவர் உருவானார் என நான் யாரையும் சொல்ல மாட்டேன். ஏன்னா என்னை பத்தி அப்படியே சிலர் பேசுறாங்க. ஆனா நான் அப்படி இல்லை’ என பேசியது பேசுபொருளாக மாறியிருக்கிறது. சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி பேசும் போது ‘சிவகாத்திகேயன் ஒரு நன்றி கெட்டவர். இப்போது மட்டுமில்லை. எப்போதும் அவர் அப்படித்தான். தன்னை தூக்கிவிட்ட, வளர்த்துவிட்ட, தன்னை ஒரு ஹீரோவாக மாற்றிய எல்லோரையுமே அவர் ஒதுக்கியவர்தான். மெரினா படத்தில் அவரை பாண்டிராஜ் அறிமுகம் செய்தார்.

ஆனால், அவர் மீண்டும் கால்ஷீட் கேட்டபோது பல வருடங்கள் இழுத்தடித்தார் சிவகார்த்திகேயன். மெரினா படத்திற்கு பின் மனம் கொத்திப்பறவை என்கிற படத்தில் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் எழில். ஆனால், எந்த பேட்டியிலும் அந்த படம் பற்றி பேசவே மாட்டார் சிவா. அதேபோல், வளர்ந்தபின் அவர் எழிலுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.

dhanush

சிவாவின் திரைவாழ்வில் அதிக அக்கறை கொண்டிருந்தவர் தனுஷ். 2 சின்ன படங்கள் மட்டுமே நடித்திருந்த அவரை தனது சொந்த காசை போட்டு எதிர் நீச்சல் என்கிற படத்தை தயாரித்தார். இதை எந்த ஹீரோவும் செய்ய மாட்டார். ஆனால், அவருடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டர் சிவா.

தனுஷ் இல்லை என்றால் சிவகார்த்திகேயன் உருவாகி இருக்கவே முடியாது என்பதுதான் உண்மை. இதை எந்த ஊடகத்திலும், பேட்டியிலும் தனுஷ் சொன்னதே இல்லை. ஆனால், அவர் அப்படி சொன்னது போல பொய்யாக பேசுகிறார் சிவா. துவக்கத்தில் அவருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த டி. இமானுக்கு சிவா என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

dhanush

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற சில படங்களை தயாரித்தவர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன். அடுத்து, சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக ரசிகர்களிடம் புரமோட் செய்தது ஆர்.டி.ராஜா என்கிற தயாரிப்பாளர். சிவகார்த்தியேனின் 75 கோடி கடனை ஏற்ற தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ். இவர்கள் எல்லோரையும் ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டார் சிவகார்த்திகேயன். அதனால்தான் மீண்டும் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் ஒரு நன்றி கெட்டவர்’ என பிஸ்மி கூறினார்.

இதுதான் சிவகார்த்திகேயனின் நிஜ முகம். ஆனால், தன் மீது சிம்பதி வர வேண்டும் என்பதற்காகவும், தன் மீதுள்ள நெகட்டிவ் இமேஜ் மாற வேண்டும் என்பதற்காஅகவும் சினிமா விழாக்களில் தனக்கு எதிராக சிலர் இருப்பது போல பேசி இப்படி பேசி வருகிறார் என ரசிகர்களே பலரும் சமூகவலைத்தளங்களில் சொல்லி வருகிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.