லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்ற நிலையில், அது வெற்றி விழா நிகழ்ச்சியே கிடையாது என்றும் நடிகர் விஜய்க்காக மட்டுமே நடத்தப்பட்ட விழா என்றும் பிரபலம் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
வெற்றி விழாவாக இருந்தால் அந்தப் படத்தின் வசூல் சாதனை, அதில் நடித்த பிரபலங்களை பாராட்டி பேசுதல், விருது கொடுப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கும். ஆனால் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜே இவ்வளவு பெரிய படத்தை எடுத்துவிட்டு என்ன பேசுவது என்றே தெரியவில்லை என சாதாரணமாக பேசிவிட்டு அமர்ந்ததில் இருந்தே தெரிகிறது அவர் விருப்பப்பட்டு அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மனைவியும் வரல!.. மகனும் கண்டுக்கல.. வி நடிகருக்காக கடைசியா வந்தது அந்த நடிகை மட்டும் தான்!..
நடிகர் விஜய் 2026 பற்றிய கேள்விக்கு கப்பு முக்கியம் பிகிலு என பதில் அளித்தது எல்லாமே செட்டப் கேள்விதான் என்றும் அந்த நிகழ்ச்சியே ரியலாக இல்லாமல் ட்ராமா போன்றே இருந்ததாகவும் பிஸ்மி குற்றம் சாட்டியுள்ளார்.
படத்திற்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் அனிருத் வரவில்லை. மெயின் வில்லனாக நடித்த சஞ்சய் தத் வரவில்லை. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு குறித்து எதுவுமே பெரிதாக பேசியது போல தெரியவில்லை. லியோ படத்துக்கு முழு காரணமே அவர்கள் தான். அதையெல்லாம் விட்டுவிட்டு நடிகர் விஜயின் துதிப்பாடல் நிகழ்ச்சியாகவே இந்த வெற்றி விழா நடைபெற்றது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: லியோ வெற்றி விழா எந்த டிவியில் எப்போ போடுறாங்க தெரியுமா?.. வேறலெவல் கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!..
லியோ மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் லோகேஷ் கனகராஜை மிகவும் பாதித்து இருப்பதாக தெளிவாக தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் முகத்தில் பெரிதாக சிரிப்பை கூட பார்க்க முடியவில்லை. 540 கோடி வசூல் செய்த படம் என அறிவித்தாலும் தயாரிப்பாளர் உள்ளிட்ட யாருமே அதை ஹைலைட் பண்ணி வசூல் சாதனையை மற்றும் படம் அடைந்த வெற்றி குறித்தும் ஒரு வார்த்தை கூட பேசாதது ஆச்சரியமாகத்தான் உள்ளது என்றும் பேசியுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…